Advertisement

அருமையான சுவையில் இறால் ஊறுகாய் செய்முறை

By: Nagaraj Sun, 20 Sept 2020 3:59:40 PM

அருமையான சுவையில் இறால் ஊறுகாய் செய்முறை

இறாலில் பிரியாணி, கிரேவி, தொக்கு, ஃப்ரை என நாம் பல வகையில் ருசி பார்த்து இருப்போம். அந்த வகையில் இப்போது ரொம்பவும் டேஸ்ட்டியான இறால் ஊறுகாய் செய்வது பற்றி பார்க்கலாம்.

தேவையானவை:

இறால் - கால் கிலோ
இஞ்சி பூண்டு விழுது - 2 ஸ்பூன்
கடுகு - 1 ஸ்பூன்
சோம்பு - 1 ஸ்பூன்
வெந்தயம் - 1/2 ஸ்பூன்
மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 ஸ்பூன்
நல்லெண்ணெய் - 200 கிராம்
வினிகர் - 1/2 கப்
உப்பு - 1 ஸ்பூன்

shrimp,ginger garlic paste,mustard,anise ,இறால், இஞ்சி பூண்டு விழுது, கடுகு, சோம்பு

செய்முறை: இறாலை கழுவி உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், இஞ்சி பூண்டு விழுது கலந்து ஊற விடவும். அடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி இறாலைப் போட்டு பொரிக்கவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி இஞ்சி பூண்டு விழுது, பொரித்த இறால் மஞ்சள் தூள், மிளகாய் தூள், வினிகர், உப்பு லேசாக வேகவிடவும். அடுத்து கடுகு, சோம்பு, வெந்தயம் மூன்றையும் வறுத்து பொடித்து இதனுடன் சேர்த்தால் இறால் ஊறுகாய் ரெடி. இதை இட்லி, தோசை, சப்பாத்தி ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும்

Tags :
|