Advertisement

அருமையான சுவையில் மாம்பழ சாதம் செய்முறை

By: Nagaraj Tue, 07 June 2022 5:57:28 PM

அருமையான சுவையில் மாம்பழ சாதம் செய்முறை

சென்னை: மாம்பழம் சாப்பிட்டால் மலச்சிக்கல் நீங்கும், நல்ல தூக்கம் வரும். மாம்பழம் புற்றுநோய், குடல் இறக்கம், இருதய நோய், மூலம் போன்ற நோய்களுக்கு சிறந்த மருந்து. கனிந்த மாம்பழத்தை கொண்டு சாதம் செய்து சாப்பிட்டு பாருங்கள். சுவையில் மயங்கி விடுவீர்கள்.

தேவையான பொருட்கள்
: வேக வைத்த சாதம் - 1 கப் தயிர் - முக்கால் கப் ப.மிளகாய் - 2 உப்பு - சுவைக்கு நன்கு கனிந்த மாம்பழம் - 1 சாதம் வடித்த தண்ணீர் - அரை கப் கொத்தமல்லி – சிறிதளவு


mango,yogurt,salt,green chillies,rice,to taste ,மாம்பழம், தயிர், உப்பு, பச்சை மிளகாய், சாதம், சுவை

செய்முறை: மாம்பழத்தை துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். ப.மிளகாயை இரண்டாக வெட்டிக்கொள்ளவும். கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். ஒரு மண் சட்டியில் வேக வைத்த சாதத்தை போட்டு அதனுடன் தயிர், உப்பு, ப.மிளகாய், நறுக்கி மாம்பழம் சேர்த்து கைகளால் நன்றாக கலக்கவும்.

அனைத்தும் நன்றாக ஒன்று சேர்ந்ததும் சூடான சாதம் வடித்த தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்கவும். கடைசியாக கொத்தமல்லி தழை சேர்த்து பரிமாறவும். அருமையான சுவையில் மாம்பழ சாதம் ரெடி.

Tags :
|
|
|
|