Advertisement

அருமையான சுவையில் புதினா துவையல் செய்முறை

By: Nagaraj Wed, 04 Nov 2020 09:06:44 AM

அருமையான சுவையில் புதினா துவையல் செய்முறை

ஜலதோஷம், காய்ச்சல் போன்றவை ஏற்பட்டால் வாயில் கசப்பு தன்மை ஏற்படும். இதனால் இனிப்பான உணவை சாப்பிட்டாலும் கசப்பு சுவை இனிப்பை மறைத்து விடும். அப்படிப்பட்ட சூழலில் வாய் கசப்பை நீக்கும் தன்மை புதினாவுக்கு மட்டுமே உள்ளது.

இட்லி, தோசைக்கு ஏற்ற பல வித சட்னியை புதினாவில் தயாரிக்கலாம். அதில் ஒன்றான புதினா துவையலை எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்.

தேவையான பொருள்கள்:

சுத்தம் செய்த, ஆய்ந்த புதினா - 1 கட்டு
தேங்காய் துருவல்- 1/2 கப்
அரிந்த வெங்காயம் - 1/2 கப்
இஞ்சி - 1 துண்டு
காய்ந்த மிளகாய் - 5
பச்சை மிளகாய் - 5
உ.பருப்பு- 50 கிராம்
க. பருப்பு- 2 ஸ்பூன்
புளி- சிறிதளவு
எண்ணெய்- 2 ஸ்பூன்
உப்பு- தேவையான அளவு.

mint,grated coconut,onion,ginger,dried chillies ,புதினா, தேங்காய் துருவல், வெங்காயம், இஞ்சி, காய்ந்த மிளகாய்

செய்முறை: புதினாவை ஆய்ந்த பிறகு தண்ணீரில் நன்றாக அலசி எடுத்துக்கொள்ளவும். அடுப்பை பத்த வைத்து பிறகு அதில் வாணலியை வைக்க வேண்டும். அதில் தேவையான அளவு எண்ணெய் விட்டு அதில் புதினா இலையை சேர்த்து நன்றாக வதக்கவும்.

இத்துடன் வெங்காயம், பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய் இவைகளை வதக்கவும். பின்னர் புளி, தேங்காய் துருவல், உப்பு ஆகியவை சேர்த்து பொன்னிறமாக வறுத்த கொள்ள வேண்டும்.ஒரு பக்கம் உளுத்தம் பருப்பையும் வறுத்து கொள்ளவும்.

இரண்டையும் சேர்த்து மிக்சியில் சிறிது தண்ணீர் விட்டு துவையல் பதத்தில் அரைத்து கொள்ள வேண்டும். அரைத்ததை வாணலியில் சேர்த்து ஒரு 10 நிமிடம் சூடு ஏற்றி கிளறி விடவும்.பத்தே நிமிடத்தில் சுவையான புதினா துவையல் தயார். இது சாப்பிடுவது மூலமாக உடலில் புத்துணர்ச்சி ஏற்படும்.

Tags :
|
|
|