Advertisement

அருமையான சுவையில் இறால் கிரேவி செய்முறை உங்களுக்காக!!!

By: Nagaraj Sun, 30 Aug 2020 08:57:27 AM

அருமையான சுவையில் இறால் கிரேவி செய்முறை உங்களுக்காக!!!

செம சுவையில் இறால் கிரேவி செய்வது எப்படி என்று பார்க்கலாம். மேலும் இந்த கிரேவியினை சப்பாத்தி, தோசை, இட்லி என அனைத்திற்கும் வைத்து சாப்பிடலாம்.

தேவையானவை:

இறால் - 1 கப்
சின்ன வெங்காயம் - 10
பூண்டு - 6 பற்கள்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
தக்காளி - 2
மஞ்சள் தூள் - 1 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
மல்லி தூள் - 2 ஸ்பூன்
கரம் மசாலா - 3/4 ஸ்பூன்
கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
துருவிய தேங்காய் - 1/4 கப்
சோம்பு - 1 டீஸ்பூன்

coconut paste,shrimp gravy,coriander powder,tomatoes,shrimp ,தேங்காய் பேஸ்ட், இறால் கிரேவி, மல்லி தூள், தக்காளி, இறால்

செய்முறை: இறாலை சுத்தம் செய்து பாத்திரத்தில் போட்டு மஞ்சள் தூள், உப்பு மற்றும் மிளகாய் தூள் சேர்த்து கலந்து கொள்ளவும்.
அடுத்து மிக்ஸியில் தேங்காய், சோம்பு மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.

அடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, பிரியாணி இலை, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். அடுத்து இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து சிறிது வதக்கிக் கொள்ளவும். அடுத்து அரைத்து வைத்துள்ள தக்காளி, மல்லி தூள், கரம் மசாலா சேர்த்து, வதக்கி இறால், உப்பு சேர்க்கவும்.

அரைத்து வைத்துள்ள தேங்காய் பேஸ்ட் சேர்த்து கொதிக்கவிட்டு கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், இறால் கிரேவி ரெடி.

Tags :