- வீடு›
- சமையல் குறிப்புகள்›
- நார்சத்து நிரம்பிய கருப்பு கொண்டை கடலையில் குழம்பு வைக்கும் முறை
நார்சத்து நிரம்பிய கருப்பு கொண்டை கடலையில் குழம்பு வைக்கும் முறை
By: Nagaraj Sun, 18 Oct 2020 7:29:36 PM
கருப்பு கொண்டை கடலையில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. இரத்த அணுக்களின் அளவை அதிகரித்து இரத்த சோகையை தடுக்கிறது. உடல் எடை மற்றும் கொழுப்பை குறைக்க உதவுகிறது.
கர்ப்பிணி பெண்கள் உணவில் இதை சேர்த்துக் கொள்ளலாம். சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. இதை தொடர்ந்து சாப்பிட்டு வருவதால் உடல் பொலிவு பெறும். படர் தாமரை போன்ற சரும பிரச்சினை வராமலும் தடுக்கலாம். இந்த கருப்பு கொண்டை கடலையில் குழம்பு செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்.
தேவையானவை:
கருப்பு கொண்டைக் கடலை - 1 கப்
சின்ன வெங்காயம் - ½ கப்
தக்காளி - 3
பச்சைமிளகாய் - 4
இஞ்சி, பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
மஞ்சளதூள்– ½ டீஸ்பூன்
மிளகாய்தூள் - ½ டீஸ்பூன்
சீரகம் - ½ டீஸ்பூன்
நல்லெண்ணெய் - 5 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தனியா தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலாத் தூள் - 1 டீஸ்பூன்
பிரிஞ்சி இலை - 2
கொத்தமல்லி இலை - தேவையான அளவு
செய்முறை: கொண்டைக் கடலையை நன்றாகக் கழுவி 10 மணிநேரம் தண்ணீர்
சேர்த்து ஊறவைக்கவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் சீரகம்,
பிரிஞ்சி இலை, வெங்காயத்தைப் போட்டு வதக்கவும் வெங்காயம் வதங்கியதும்
அதனுடன் மிளகாய், இஞ்சி, பூண்டு விழுது சேர்த்துக் கிளறவும்.
பின்
மஞ்சள் தூள், கரம் மசாலாத் தூள், மிளகாய்த் தூள், உப்பு, தனியா தூள்
ஆகியவற்றையும் சேர்த்து லேசாக வதக்கவும். பின்னர் தக்காளி சேர்த்து
வதங்கியதும் கொண்டைக் கடலையை சேர்த்து தேவைக்கேற்ப தண்ணீர் ஊற்றி வேக
வைக்கவும். நன்றாக வெந்தவுடன் கொத்தமல்லி இலையைத் தூவி இறக்கவும்.