Advertisement

கமகமக்கும் வாசனையில் மீன் பிரியாணி தயாரிக்கும் முறை!

By: Nagaraj Wed, 06 May 2020 6:57:56 PM

கமகமக்கும் வாசனையில் மீன் பிரியாணி தயாரிக்கும் முறை!

சென்னை: சிக்கன், மட்டனை விட சூப்பர் சுவை கொண்டது மீன் பிரியாணி. இதை செய்யும் முறை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

மீன் – 1/4 கிலோ
அரிசி – 2 ஆழாக்கு
வெங்காயம் – 150 கிராம்
தக்காளி – 150 கிராம்
பச்சை மிளகாய் – 2,இஞ்சி
பூண்டு விழுது – 2 டீஸ்பூன்
புதினா, கொத்தமல்லி இலை – 1/4 கட்டு
மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்
தனியாத்தூள் – 1 டீஸ்பூன்
மஞ்சள்தூள் – 1/4 டீஸ்பூன்
தயிர் – 1 கப்
உப்பு – தேவையான அளவு.எண்ணை – 1/2 தேக்கரண்டி

fish biryani,jaggery,turmeric,excellent taste,recipe,tamil recipe,non veg recipe ,மீன் பிரியாணி, தனியாத்தூள், மஞ்சள்தூள், அருமையான சுவை.

செய்முறை:

மீனை சுத்தம் செய்து துண்டுகளாக்கவும். வெங்காயம், தக்காளியை பொடியாக நீளவாக்கில் நறுக்கவும். மிளகாயைக் கீறிக் கொள்ளவும். ஒரு அகலமான பாத்திரம் அல்லது குக்கரில் எண்ணை ஊற்றி காய்ந்ததும் பட்டை, லவங்கம் சேர்த்துத் தாளிக்கவும். வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுது, தக்காளி, புதினா, கொத்தமல்லி இலை இவற்றை ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து வதக்கவும்.
தயிர் மற்றும் போதுமான அளவு உப்பு சேர்த்து மீனை வதக்கவும். தொடர்ந்து மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள் தூள் சேர்க்கவும்.பாசுமதி அரிசி ஒன்றரை பங்கும், சாதா அரிசி 2 பங்கும் சேர்த்து வேக வைக்கவும். பாத்திரத்தில் `தம்` சேர்த்து (ஆவி போகாமல் மூடிவைத்து) சிறிது நேரத்தில் இறக்கவும்.

fish biryani,jaggery,turmeric,excellent taste,recipe,tamil recipe,non veg recipe ,மீன் பிரியாணி, தனியாத்தூள், மஞ்சள்தூள், அருமையான சுவை.

குக்கரில் ஒரு விசில் வந்ததும், குறைந்த தீயில் வைத்திருந்து அடுப்பை அணைத்து விடவும். சுவையான மீன் பிரியாணி மணமணக்க ரெடி.

Tags :
|