Advertisement

மருத்துவ குணங்கள் நிறைந்த கோவக்காயில் சாம்பார் வைப்பது பற்றி உங்களுக்காக!!!

By: Nagaraj Thu, 10 Nov 2022 10:00:43 PM

மருத்துவ குணங்கள் நிறைந்த கோவக்காயில் சாம்பார் வைப்பது பற்றி உங்களுக்காக!!!

சென்னை: மருத்துவ குணங்கள் நிறைந்த கோவக்காயில் சாம்பார் வைப்பது எப்படி என்று தெரியுங்களா? சர்க்கரை நோய்க்கான சிறந்த மருந்துதான் கோவக்காய். இதில் உள்ள வைட்டமின்கள் B1, B2, B3, C மற்றும் இரும்பு, சுண்ணாம்பு, பொட்டாசியம் சத்துக்கள். உள்ளன.

இதயம் சம்பந்தப்பட்ட நோய்களை குணப்படுத்தும். இதய துடிப்பினை சீராக்கும். இத்தனை சிறப்பு வாய்ந்த கோவக்காயில் சாம்பார் வைக்கும் போது அது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.


தேவையான பொருட்கள்:

கோவக்காய் – கால் கப், துவரம் பருப்பு – 50கிராம், சின்ன வெங்காயம் – 10, பச்சை மிளகாய் – 3, தக்காளி – 2, புளி – தேவைகேற்ப, சீரகம், கடுகு, கறிவேப்பிலை – சிறிதளவு, உப்பு – தேவைகேற்ப, எண்ணெய் – தேவைகேற்ப.

health,sambar,courgette,asparagus powder,taste ,ஆரோக்கியம், சாம்பார், கோவைக்காய், பெருங்காயத்தூள், ருசி

செய்முறை: முதலில் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் மூன்றையும் நறுக்கி வைத்து கொள்ளவும். கோவக்காயை வட்ட வட்டமாக வெட்டிக் கொள்ளவும். பின்பு துவரம் பருப்பை கழுவி பருப்புக்குத் தேவையான நீர் ஊற்றி வேக வைக்கவும். பருப்பு முக்கால் பதம் வெந்ததும் சிறிதளவு சீரகம் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து வேக விடவும்.


மற்றொரு வாணலியில் தாளிக்க சிறிதளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் கடுகு மற்றும் சீரம் போட்டு வெடிக்க விடவும். அதன் பின் நறுக்கிய வெங்காயம் போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

வதங்கியதும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும் . கறிவேப்பிலை சேர்த்து வதங்கியதும் நறுக்கிய தக்காளியை போடவும். அதனுடன் சிறிதளவு உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.

பின்பு கோவக்காயைச் சேர்த்து வதக்கி சிறிது நேரம் வேக விடவும். பின் வதக்கிய காய்கறிகளை வேக வைத்த பருப்பில் போட்டு கொதிக்க விடவும். ஒரு கொத்தி வந்ததும் சாம்பார் பொடி சிறிதளவு மிளகாய் பொடி மற்றும் மல்லி பொடி சேர்த்து நன்கு கொதித்ததும் புளி கரைசல் சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கும்போது பெருங்காயதூள் போட்டு இறக்கி மூடி வைக்கவும்.

இந்த கோவைக்காய் சாம்பாரை சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் மிகவும் ருசியாகவும் இருக்கும், உடலுக்கும் ஆரோக்கியம் அளிக்கும்.

Tags :
|
|