Advertisement

புதுவிதமான சௌ சௌ சட்னி

By: vaithegi Sat, 18 June 2022 10:36:26 AM

புதுவிதமான சௌ சௌ சட்னி

தினமும் காலையில் எந்த விதமான சட்டினி வைப்பது என்பது இல்லத்தரசிகளின் மிகவும் கடினமான செயல்களில் ஒன்று. ஆனால் இப்பொது புதுவிதமான சட்டினி ஒன்றை சமைத்துப்பாருங்கள். பிறகு இந்த சட்டினி விட்டு வேறு எந்த விதமான சட்டினியம் வைக்கமாட்டீர்கள். இது உடலுக்கு மிகவும் சத்தானது

சௌசௌவில் வைட்டமின் ஏ, பி, சி, கே போன்ற சத்துகள் அடங்கியுள்ளன. சௌசௌவில் காணப்படும் வைட்டமின்கள் புற்றுநோய் தடுப்பியாக செயல்படுகிறது என ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். எனவே இதை உணவில் பயன்படுத்தினால் புற்றுநோய் வராமல் பாதுகாத்து கொள்ள முடியும்.

உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் சௌசௌ காயை சாப்பிடலாம். இது நரம்பு தளர்ச்சியை போக்கி நரம்புகளை கட்டுபடுத்தும் ஆற்றல் கொண்டது. சௌசௌவில் கால்சியம் சத்துகள் காணப்படுவதால் எலும்புகளை வலுப்பெற செய்கிறது. எனவே வளரும் குழந்தைகளுக்கு சௌசௌ காயை உண்ண கொடுக்கலாம்.

தேவையான பொருட்கள்:

சௌ சௌ - 2
தக்காளி - 1
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
கடுகு- கால் தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - கால் தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 6
கறிவேப்பிலை - 1 பிடி
உப்பு - தேவைக்கு ஏற்ப

vitamins,nutrients,high blood pressure ,வைட்டமின் ,சத்துகள் ,உயர் ரத்த அழுத்தம்

செய்முறை:

சௌ சௌ, தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும். கடாயில் சிறிது எண்ணெய் விட்டு சௌ சௌ, காய்ந்த மிளகாய், தக்காளியை சேர்த்து சுருள வதக்கி கொள்ளவும்.

வதக்கியதை ஆறவிட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும். நான்ஸ்டிக் கடாயில் சிறிது எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து அரைத்த விழுது, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து தண்ணீர் சுண்டும் வரை கொதிக்க விட வேண்டும்.

தேவைப்பட்டால் ஒரு பெரிய வெங்காயம் சேர்த்தும் அரைத்துக் கொள்ளலாம். சுவையான மட்டும் சத்தான சௌ சௌ சட்னி தயாரியாகி விட்டது.


Tags :