Advertisement

ஆரோக்கியம் நிறைந்த மருத்துவக்குணங்கள் அடங்கிய பூண்டு சாதம் செய்முறை

By: Nagaraj Sun, 10 May 2020 12:43:09 PM

ஆரோக்கியம் நிறைந்த மருத்துவக்குணங்கள் அடங்கிய பூண்டு சாதம் செய்முறை

பூண்டில் ஏராளமான மருத்துவக்குணங்கள் அடங்கி உள்ளன. உடலுக்கு ஆரோக்கியத்தை அளிப்பதில் மிக முக்கிய பங்கு வகிக்கும் உணவுப் பொருட்களில் இதுவும் ஒன்று. சிறந்த மருத்துவக்குணம் கொண்ட பூண்டு சாதம் அனைவருக்கும் மிகவும் பிடித்தமான ஒன்று. இதை செய்வது பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

garlic,health,dried chilli,creampie,lentils ,பூண்டு சாதம், ஆரோக்கியம், காய்ந்த மிளகாய், தனியா, கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு

தேவையான பொருட்கள்

சாதம் - 2 கப்
பூண்டு - 15 பல்
காய்ந்த மிளகாய் - 2
தனியா - 1 ஸ்பூன்
கடலை பருப்பு - 1 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 ஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
கடுகு - கால் ஸ்பூன்
கறிவேப்பிலை -சிறிதளளவு
உப்பு - தேவையான அளவு

garlic,health,dried chilli,creampie,lentils ,பூண்டு சாதம், ஆரோக்கியம், காய்ந்த மிளகாய், தனியா, கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு

செய்முறை

ஒரு கடாயில் எண்ணெய் 1 ஸ்பூன் விட்டு அதில் கடலை பருப்பு , உளுத்தம் பருப்பு , தனியா , மிளகாய் ஆகியவற்றைப் போட்டு சிவக்க வறுக்கவும் .

கடைசியில் 4 அல்லது 5 பூண்டு பற்களைப் போட்டு சற்று வதக்கி எடுத்து ஆற விடவும் .

வறுத்த அனைத்தையும் நன்றாகப் பொடித்துக் கொள்ளவும் .

அதே கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி அதில் மீதமுள்ள பூண்டுப் பற்களைப் போட்டு சிவக்க வதக்கி எடுத்து , தனியாக வைத்துக் கொள்ளவும் .

அதே எண்ணெயில் கடுகு போட்டு வெடிக்க ஆரம்பித்ததும் கறிவேப்பிலை சேர்க்கவும் .

சாதம் மற்றும் பொடித்து வைத்துள்ள பொடி , உப்பு ஆகியவற்றைச் சேர்த்துக் கலக்கவும்.

கடைசியில் வதக்கி வைத்துள்ளப் பூண்டையும் சேர்த்துக் கிளறி இறக்கி வைக்கவும் . ரொம்ப சுவையான பூண்டு சாதம் ரெடி.

Tags :
|
|