Advertisement

உடல் பிரச்சனைகளை தீர்க்கும் நெல்லிக்காய் துளசி துவையல் செய்முறை

By: Nagaraj Tue, 10 Nov 2020 2:54:21 PM

உடல் பிரச்சனைகளை தீர்க்கும் நெல்லிக்காய் துளசி துவையல் செய்முறை

பல்வேறு உடல் பிரச்சனைகளை தீர்க்கும் நெல்லிக்காய் துளசி துவையல் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்.

துளசியை தினமும் தின்று வந்தால் குடல், வயிறு, வாய் தொடர்பான பிரச்சனைகள் வராது. தினமும் காலையில் வெறும் வயிற்றில் நெல்லிக்காய் ஜூஸ் குடித்து வந்தால், அல்சரைக் குணப்படுத்தலாம்.

தேவையான பொருட்கள்

முழு நெல்லிக்காய் - 5
பச்சை மிளகாய் - 3,
துளசி - ஒரு கைப்பிடி அளவு
தேங்காய்த் துருவல் - ஒரு கைப்பிடி அளவு
கடலைப்பருப்பு,
உளுத்தம்பருப்பு - தலா ஒரு டேபிள்ஸ்பூன்
கடுகு, பெருங்காயத்தூள் - தலா கால் டீஸ்பூன்,
கறிவேப்பிலை - சிறிதளவு,
நல்லெண்ணெய், இந்துப்பு - தேவையான அளவு.

gooseberry,basil,indus,coconut grind,green chili ,நெல்லிக்காய், துளசி, இந்துப்பு, தேங்காய் துருவல், பச்சை மிளகாய்

செய்முறை: முதலில் நெல்லிக்காயின் கொட்டைகளை நீக்கி துண்டுகளாக்கவும். வாணலியில் நல்லெண்ணெய் விட்டு உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, பச்சை மிளகாய், நெல்லிக்காய், தேங்காய்த் துருவல், இந்துப்பு சேர்த்து வதக்கி இறக்கவும்.

ஆறிய பின்பு மிக்ஸியில் சேர்த்து, தண்ணீர் தெளித்துத் துவையலாக அரைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை தாளித்து, துவையலுடன் சேர்க்கவும். சத்தான நெல்லிக்காய் துளசி துவையல் ரெடி.

Tags :
|
|