Advertisement

அருமையான சுவையில் நெல்லிக்காய் சாதம் செய்முறை

By: Nagaraj Sat, 04 Feb 2023 7:20:03 PM

அருமையான சுவையில் நெல்லிக்காய் சாதம் செய்முறை

சென்னை: நெல்லிக்காய் சாதம் மதிய உணவுக்கு ஏற்ற சத்தான சாப்பாடு ஆகும். இது எலுமிச்சை சாதம் மற்றும் மாங்காய் சாதம் செய்முறையுடன் ஒத்து போகும் விதத்தில் இருக்கும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நெல்லிக்காய் அதிக அளவில் நம் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். எனவே நெல்லிக்காயை கொண்டு சாதம் சமைக்கும் முறை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:

சாப்பாடு அரிசி - இரண்டு கப்.
நெல்லிக்காய் - 10 எண்ணம்.
கடலை பருப்பு - 2 ஸ்பூன்.
வெந்தயம் - 2 ஸ்பூன்.
மிளகாய் வத்தல் - 4 எண்ணம்.
கடுகு / குத்துப் பருப்பு - 1 ஸ்பூன்.
பெருங்காயம் - சிறிதளவு.
நல்லெண்ணெய் - 2 ஸ்பூன்.
மிளகாய் தூள் - 2 ஸ்பூன்.
மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்.
உப்பு - தேவைக்கு.
கறிவேப்பிலை - ஒரு கொத்து.
இஞ்சி - இரண்டு துண்டு தோல் நீக்கி பொடியாக நறுக்கியது.

turmeric powder,chili powder,salt,gooseberry,rice ,மஞ்சள்தூள், மிளகாய் தூள், உப்பு, நெல்லிக்காய், சாதம்

செய்முறை: சாப்பாடு அரிசியை தண்ணீரில் களைந்து சுத்தம் செய்து, குக்கரில் போட்டு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பத்து நிமிடங்கள் வேக வைத்து, ஆற வைத்துக் கொள்ளவும். சாதம் உதிரி உதிரியாக இருந்தால் கூடுதல் சுவையாக இருக்கும்.

நெல்லிக்காய்களை கழுவி துருவிக் கொள்ளவும். இப்போது அடுப்பில் சட்டியை வைத்து இரண்டு ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி, சூடானதும் அதில் கடுகு, குத்துப் பருப்பு போட்டு தாளித்து, அதனுடன் வெந்தயம், கடலை பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை, கிள்ளிய மிளகாய் வத்தல், நறுக்கிய இஞ்சி ஆகியவற்றை ஒவ்வொன்றாக சேர்த்து வதக்கிக் கொள்ளவும். இந்த கலவை நன்றாக வதங்கிய உடன், அதில் துருவி வைத்துள்ள நெல்லிக்காயை சேர்த்து, மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து நன்றாக கிளறி மீண்டும் சிறிது நேரம் வேகவிடவும்.

பச்சை வாசனை நீங்கி அனைத்தும் ஒன்றாக சேர்ந்து வெந்து வந்தவுடன் அதை அடுப்பில் இருந்து இறக்கி வைத்து, ஏற்கனவே உதிரி உதிரியாக தயார் செய்து வைத்துள்ள சாதத்தில் கொட்டி நன்றாக கிளறி மூடி வைக்கவும். ஒரு ஐந்து நிமிடம் கழித்து அதை திறந்து பார்த்தால் நல்ல ஒரு நறுமணத்துடன் கூடிய நெல்லிக்காய் சாதம் தயாராக இருக்கும்.

Tags :
|