Advertisement

அருமையான ருசியில் லால் பன்னீர் செய்முறை உங்களுக்காக!!!

By: Nagaraj Thu, 09 Feb 2023 08:53:09 AM

அருமையான ருசியில் லால் பன்னீர் செய்முறை உங்களுக்காக!!!

சென்னை: குழந்தைகள் உங்களை சுற்றி, சுற்றி வரணுமா. அப்போ சுவையான லால் பன்னீர் செய்து கொடுங்கள். இதோ செய்முறை.

தேவையான பொருட்கள்:
பன்னீர் – 200 கிராம்எண்ணெய் – 4 டேபிள்ஸ்பூன்சோள மாவு – 2 டீஸ்பூன்பிரியாணி இலை – 1பட்டை – 1சீரகம் – 1 டீஸ்பூன்தக்காளி – 2 (பெரிது மற்றும் அரைக்கவும்)இஞ்சி விழுது – 1 டீஸ்பூன்காஷ்மீரி மிளகாய் தூள் – 1 டேபிள்ஸ்பூன்சீரகப் பொடி – 1 டீஸ்பூன்உப்பு – சுவைக்கு ஏற்பகொத்தமல்லி – சிறிது

corn flour,laal panneer,panneer, ,காஷ்மீரி மிளகாய் தூள், பிரியாணி இலை, லால் பன்னீர்

செய்முறை: பன்னீரை எடுத்து சோள மாவில் நனைத்து பொன்னிறமாக வறுத்து தனியாக வைக்கவும். பின்னர் காஷ்மீரி மிளகாய் தூள் மற்றும் தண்ணீர் சேர்த்து பேஸ்டாக பிசைந்து கொள்ளவும்.

பிறகு ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி, பிரியாணி இலை, பட்டை, சீரகம் சேர்த்து வதக்கவும். பிறகு மிளகாய் தூள் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். பிறகு இஞ்சி விழுதைச் சேர்த்துக் கிளறி, துருவிய தக்காளியைச் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

அடுத்து அதனுடன் சீரகத்தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறி சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். பின் பனீர் துண்டுகளை சேர்த்து கிளறி, சிறு தீயில் 5 நிமிடம் வேகவைத்து அதன் மேல் கொத்தமல்லி தூவி இறக்கினால், லால் பனீர் ரெடி.

Tags :