Advertisement

அருமையான ருசியில் பருப்பு துவையல் செய்முறை உங்களுக்காக!

By: Nagaraj Wed, 03 Aug 2022 11:43:12 AM

அருமையான ருசியில் பருப்பு துவையல் செய்முறை உங்களுக்காக!

சென்னை: சுட, சுட சாப்பாட்டில் பருப்பு துவையல் போட்டு கொஞ்சமாக நல்லெண்ணெய் ஊற்றி சாப்பிட்டால் ருசி மிகவும் அருமையாக இருக்கும். இந்த பருப்பு துவையலை செய்வது பற்றி தெரிந்து கொள்வோம்.


தேவையான பொருட்கள்:

துவரம் பருப்பு – 1/2 கப்
துருவிய தேங்காய் – 1 டேபிள் ஸ்பூன்
வரமிளகாய் – 2-3
பூண்டு – 2 பற்கள்
உப்பு – தேவையான அளவு

lentil wash,varamlai,duvaram dal,food,rasam ,பருப்பு துவையல், வரமிளகாய், துவரம் பருப்பு, சாப்பாடு, ரசம்

செய்முறை: முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் துவரம் பருப்பை போட்டு பொன்னிறமாக வறுத்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.


பருப்பானது நன்கு குளிர்ந்ததும், அதனை மிக்ஸியில் போட்டு, அத்துடன் வரமிளகாய், பூண்டு, தேங்காய் மற்றும் உப்பு சேர்த்து, தண்ணீர் ஊற்றி, மென்மையாக அரைக்காமல், ஓரளவு அரைத்து இறக்கினால், சுவையான துவரம் பருப்பு துவையல் ரெடி. இதை சுடு சாப்பாடு மற்றும் ரசம் சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் மிகவும் அருமையாக இருக்கும்.

Tags :
|