Advertisement

அருமையான ருசியில் தக்காளி பூரி செய்முறை உங்களுக்காக!!!

By: Nagaraj Fri, 22 July 2022 5:09:09 PM

அருமையான ருசியில் தக்காளி பூரி செய்முறை உங்களுக்காக!!!

சென்னை: தக்காளி கலந்து பூரி செய்து பார்த்து இருக்கிறீர்களா. அருமையான ருசியுடன் இருக்கும் இதை எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு – 2 கப்,தக்காளி – 3காய்ந்த மிளகாய் – 2உப்பு – சுவைக்கேற்பநெய் அல்லது எண்ணெய் – ஒரு டீஸ்பூன்எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு

tomatoes,chillies,wheat flour,ghee,salt ,தக்காளி, மிளகாய், கோதுமை மாவு, நெய், உப்பு

செய்முறை:தக்காளியை கொதிக்கும் நீரில் போட்டு எடுத்து, தோலை உரித்து, மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். மிளகாயை வெந்நீரில் சில நிமிடங்கள் ஊறவைத்து, விழுதாக அரைத்துக்கொள்ளவும்.கோதுமை மாவுடன் தக்காளி விழுது, மிளகாய் விழுது, நெய் அல்லது எண்ணெய், உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும்.

சிறு சிறு பூரிகளாக தேய்த்து, காயும் எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுக்கவும். சூப்பரான தக்காளி பூரி தயார்.

Tags :
|