Advertisement

ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பச்சை பயறு தால் செய்முறை

By: Nagaraj Mon, 13 June 2022 5:50:05 PM

ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பச்சை பயறு தால் செய்முறை

சென்னை: பச்சை பயறு உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இதை அடிக்கடி உணவில் சேர்ப்பதால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். பச்சை பயறை கொண்டு குழம்பு, தால் என்று செய்து சாப்பிடலாம். பச்சை பயறு கொண்டு தால் செய்யுங்கள். இந்த தால் சப்பாத்திக்கு மட்டுமின்றி, சாதத்திற்கும் சூப்பராக இருக்கும்.
தேவையான பொருட்கள்: * பச்சை பயறு - 1/2 கப் * சின்ன வெங்காயம் - 10 (நறுக்கியது) * தக்காளி - 1 (நறுக்கியது) * கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது) * உப்பு - சுவைக்கேற்ப * தண்ணீர் - 2 1/2 கப் தாளிப்பதற்கு... * எண்ணெய் - 2 டீஸ்பூன் * சீரகம் - 1/2 டீஸ்பூன் * பூண்டு - 2 பல் * கறிவேப்பிலை - சிறிது * மிளகு - 1/2 டீஸ்பூன் மசாலா பொடிகள்... * மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன் * மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன் * மல்லித் தூள் - 1/2 டீஸ்பூன்

green beans,turmeric powder,chilli powder,coriander powder,dal,ready ,
பச்சைப்பயறு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், தால், தயார்

செய்முறை: முதலில் பச்சை பயறை ஒரு கடாயில் போட்டு குறைவான தீயில் குறைந்தது 3-5 நிமிடம் வறுத்து இறக்கி, குளிர வைத்து, நீரில் அலசி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகம், மிளகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, பூண்டு சேர்த்து சில நொடிகள் வதக்க வேண்டும். அதில் சின்ன வெங்காயத்தை சேர்த்து சிறிது நேரம் வதக்க வேண்டும்.
பிறகு அதில் தக்காளி சேர்த்து நன்கு வதக்க வேண்டும். அதன் பின் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள் ஆகியவற்றை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி, கழுவி வைத்துள்ள பச்சை பயறை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி, நீரை ஊற்றி குக்கரை மூடி மிதமான தீயில் வைத்து 6 விசில் விட்டு இறக்கிக் கொள்ளுஙகள்.
விசில் போனதும் குக்கரை திறந்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, மத்து கொண்டு நன்கு மசித்து விட வேண்டும். பின் கடைந்த பச்சை பயறை மீண்டும் அடுப்பில் வைத்து ஒரு கொதி விட்டு இறக்கி, கொத்தமல்லியை மேலே தூவினால், பச்சை பயறு தால் தயார்.

Tags :
|