Advertisement

அரைத்த மிளகு சேர்த்த கிரில்ட்டு இறால் மசாலா செய்முறை

By: Nagaraj Tue, 16 June 2020 09:44:08 AM

அரைத்த மிளகு சேர்த்த கிரில்ட்டு இறால் மசாலா செய்முறை

இறால் மசாலா, குருமா செய்து சாப்பிட்டு இருப்பீர்கள். இப்போது கிரில்ட் இறால் செய்முறை உங்களுக்காக. அருமையான ருசியில் இருக்கும். ஒருமுறை செய்து கொடுத்தால் மீண்டும், மீண்டும் வேண்டும் என்று கேட்பார்கள் உங்கள் குடும்பத்தினர்.

தேவையான பொருட்கள்


இறால் - 500 கிராம்

பூண்டு - 4-5 பெரியது

எலுமிச்சை சாறு - 3 மேசைக்கரண்டி

ஆலிவ் எண்ணெய் - 3 மேசைக்கரண்டி

அரைத்த மிளகு - 1 தேக்கரண்டி

நறுக்கிய கொத்தமல்லி இலை - 2 தேக்கரண்டி

உப்பு - சுவைக்கேற்ப


shrimp,grilled pepper,coriander,olive oil ,இறால், அரைத்த மிளகு, கொத்தமல்லி, ஆலிவ் எண்ணெய்

செய்முறை: கொத்தமல்லி இலையை நன்கு பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இறால், நசுக்கிய பூண்டு, எலுமிச்சை சாறு, ஆலிவ் எண்ணெய், அரைத்த மிளகு மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து கலந்து 10-15 நிமிடங்கள் ஊற வைக்கவும்.

கிரில்லை சூடாக்கி அனைத்து இறால்களையும் ஒரே லேயராக பெரிய ஆவன்-ப்ரூப் பாத்திரத்தில் வைக்கவும். பாத்திரத்தை கிரில்லின் கீழ் வைக்கவும். இறாலின் ஒரு புறத்தை 2-3 நிமிடங்கள் கிரில் செய்யவும்.

பாத்திரத்தை வெளியே எடுத்து, இறால்களைத் திருப்பவும். மறு புறமும் 2-3 நிமிடங்கள் கிரில் செய்யவும். பின் கொத்தமல்லி இலை தூவி இறக்கினால் சுவையான கிரில்டு இறால் ரெடி. உங்கள் குடும்பத்தினர் விரும்பி சாப்பிடுவார்கள்.

Tags :
|