Advertisement

ஆரோக்கியத்தை உயர்த்தும் பேரீச்சம்பழ தயிர் பச்சடி

By: Nagaraj Fri, 25 Nov 2022 10:32:56 AM

ஆரோக்கியத்தை உயர்த்தும் பேரீச்சம்பழ தயிர் பச்சடி

சென்னை: பேரீச்சம்பழ தயிர் பச்சடி செய்து இருக்கீங்களா. சரி இப்போ செய்து பார்ப்போம். வாருங்கள்.

தேவையான பொருட்கள்:

புளிக்காத தயிர் – 2 கப்,
பேரீச்சம்பழம் (கொட்டை நீக்கியது) – 10,
முந்திரி – 8,
மாதுளை முத்துக்கள் – கால் கப்,
ஃப்ரெஷ் க்ரீம் – கால் கப்,
மிளகுத்தூள் – அரை டீஸ்பூன்,
உப்பு – சிறிது,
தேன் – சுவைக்கு.

curd,cashews,dates,pomegranate,pepper,salt ,தயிர், முந்திரி, பேரீச்சம்பழம், மாதுளை, மிளகுத்தூள், உப்பு

செய்முறை: தயிரை நன்கு வடிகட்டுங்கள். முந்திரியையும், பேரீச்சம்பழத்தையும் பொடியாக நறுக்குங்கள். தயிருடன் ஃப்ரெஷ் க்ரீம், முந்திரி, பேரீச்சம்பழம், மாதுளை, மிளகுத்தூள், உப்பு, தேன் சேர்த்து நன்கு கலந்து, கலர்ஃபுல்லான கிண்ணத்தில், ஸ்பூனுடன் கொடுங்கள்.


சில விநாடிகளிலேயே உங்கள் குழந்தைகள் ‘ஒன்ஸ்மோர்’ கேட்பார்கள். உடலுக்கும் ஆரோக்கியம், பேரீச்சம் பழத்தில் நோய் எதிர்பபு சக்தி இருப்பதால் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.

Tags :
|
|
|