Advertisement

உடல் ஆரோக்கியத்தை உயர்த்தும் பாசிப்பருப்பு காய்கறி சாலட்

By: Nagaraj Mon, 19 June 2023 7:27:54 PM

உடல் ஆரோக்கியத்தை உயர்த்தும் பாசிப்பருப்பு காய்கறி சாலட்

சென்னை: பாசிப்பருப்பு காய்கறி சாலட் செய்வது எப்படி தெரியுங்களா. உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும் இதை செய்வது எப்படி என்று தெரிந்து கொள்வோம் வாங்க.

தேவையானவை: பாசிப்பருப்பு, பொடியாக நறுக்கிய வெள்ளரி துண்டுகள், தோல் சீவி துருவிய மாங்காய், துருவிய கேரட், துருவிய தேங்காய்ப் பூ அனைத்தும் தலா அரை கப், பச்சை மிளகாய் 3, மல்லித் தழை கால் கட்டு, உப்பு தேவையான அளவு.

algae,cucumber slices,mango,carrot,coconut flower,green chillies ,பாசிப்பருப்பு, வெள்ளரி துண்டுகள், மாங்காய், கேரட்,  தேங்காய்ப் பூ, பச்சை மிளகாய்

செய்முறை: பாசிப்பருப்பை தண்ணீரில் நான்கு மணி நேரம் ஊற வைக்கவும். வெள்ளரி, மாங்காய், கேரட் ஆகியவற்றை ஒன்றாய் கலந்து, ஃபிரிட்ஜில் வைத்து குளிர்விக்கவும்.

பின் பருப்பிலுள்ள நீரை வடித்துவிட்டு, பருப்பை குளிர்வித்த காய்களுடன் சேர்க்கவும். பிறகு அதனுடன் நறுக்கிய பச்சை மிளகாய், மல்லி இலைகள், தேங்காய்ப் பூ, உப்பு சேர்த்து நன்கு கலந்து விடவும். சாப்பிடும்போது சாலட்டை மசாலா தயிரினால் டிரஸ்ஸிங் பண்ணி பரிமாறவும்.

தக்காளி ஒன்றை இரண்டாய் நறுக்கி, ஒரு பாதியின் விதைப் பகுதியை நீக்கிவிட்டு அந்தக் கப்பில் மசாலா தயிரை ஊற்றி சாலட்டின் நடுவில் வைத்தும், வெள்ளரி இலைகளாலும் சாலட்டை அலங்கரிக்கலாம். சத்தான சாலட் சடுதியில் தயார்.

Tags :
|
|
|