Advertisement

ஆரோக்கியத்திற்கு உறுதுணையாக இருக்கும் சிறுதானிய பாஸ்தா

By: Nagaraj Sun, 29 Jan 2023 11:06:03 PM

ஆரோக்கியத்திற்கு உறுதுணையாக இருக்கும் சிறுதானிய பாஸ்தா

சென்னை: நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும் சிறுதானிய பாஸ்தா எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளுங்கள்.

தேவையானவை:
சாமை மாவு - 100கிராம்கேரட் -50 கிராம்உருளைக்கிழங்கு - 50 கிராம்குடைமிளகாய் - 50 கிராம்வெங்காயம்- 50 கிராம்பூண்டு -8 பல்வெண்ணெய் -100 கிராம்உப்பு தேவையான அளவுமிளகு தூள் தேவையான அளவு.

butter,garlic,salt,pepper powder,vegetables,pasta ,வெண்ணெய், பூண்டு, உப்பு, மிளகு தூள், காய்கறிகள், பாஸ்தா

செய்முறை: சாமை மாவுடன் உப்புகலந்த சூடான நீர் தெளித்து நன்கு பிசைந்து, சிறு சிறு நிளஉருண்டைகளாக உருட்டவும். இதை நன்கு கொதிக்கும் நீரில் 10 நிமிடம் வேக விடவும். பின் வடிக்கவும்.

காய்கறிகளுடன், பூண்டு சிறிது உப்பு கலந்து வேகவைத்து, வடித்து, மைய அரைத்து கொள்ளவும்.

வெண்ணெயை சூடாக்கிபொடியாக நறுக்கிய பூண்டை வதக்கவும், பின் வடிகட்டிவைத்துள்ள உருண்டைகளை தாளித்து பின் அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து மெதுவாக கலந்து கொதித்த பின் உப்பும், மிளகு தூளும் கலந்து பரிமாறவும்.

Tags :
|
|
|