Advertisement

ஆரோக்கியமும் ருசியும் நிறைந்த கேரட் சட்னி செய்முறை

By: Nagaraj Sat, 25 June 2022 10:32:59 AM

ஆரோக்கியமும் ருசியும் நிறைந்த கேரட் சட்னி செய்முறை

சென்னை: கேரட் பொரியல் செய்து இருப்பீர்கள். கேரட்டில் சட்னி செய்து இருக்கிறீர்களா. உங்களுக்காக செய்முறை.

தேவையான பொருள்கள் -
கேரட் - 2
சின்ன வெங்காயம் - 10
தக்காளி - 1
மிளகாய் வத்தல் - 2
கடலைப்பருப்பு - 1 மேஜைக்கரண்டி
காயத்தூள் - சிறிது
உப்பு - தேவையான அளவு
தாளிக்க -
நல்லெண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
உளுந்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது

carrots,onions,tomatoes,mustard,lentils ,கேரட், வெங்காயம், தக்காளி, கடுகு, உளுத்தம் பருப்பு

செய்முறை: முதலில் கேரட், வெங்காயம், தக்காளி மூன்றையும் பொடிதாக வெட்டி வைக்கவும். அடுப்பில் கடாயை வைத்து சூடானதும் கடலைப்பருப்பை போட்டு நன்கு வறுத்து தனியே எடுத்து வைக்கவும்.


பிறகு அதே கடாயில் ஒரு மேஜைக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் கேரட்டை போட்டு இரண்டு நிமிடம் வரை வதக்கி வேறு பாத்திரத்தில் மாற்றி வைக்கவும். அடுத்து ஒரு மேஜைக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் மிளகாய் வத்தல் போடவும். பிறகு வெங்காயம் சேர்த்து வதக்கவும்.


வெங்காயம் பொன்னிறமானதும் தக்காளி சேர்த்து வதக்கவும். தக்காளி சுருள வதங்கியதும் காயத்தூள், உப்பு சேர்த்து கிளறி சிறிது நேரம் ஆறவிடவும். ஆறிய பிறகு மிக்ஸ்சியில் வதக்கிய அணைத்து பொருட்களையும் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.


அடுப்பில் கடாயை வைத்து மீதமுள்ள ஒரு மேஜைக்கரண்டி நல்லெண்ணைய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம்பருப்பு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை சேர்த்து சட்னியில் ஊற்றி கலக்கி விடவும். சுவையான கேரட் சட்னி ரெடி. இட்லி, தோசையுடன் சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கும்.

Tags :
|