Advertisement

ஆரோக்கியத்திற்கு உறுதுணையாகும் வாழைத்தண்டு சூப்

By: Nagaraj Thu, 15 Sept 2022 11:03:27 PM

ஆரோக்கியத்திற்கு உறுதுணையாகும் வாழைத்தண்டு சூப்

சென்னை: வாழைத்தண்டு உடலுக்கு மிகுந்த நன்மையை தருகிறது. அதில் சூப் வைத்து சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழுங்கள்.

தேவையானவை:

வாழைத் தண்டு - 1
பாசிப்பருப்பு - 200 கிராம்
பச்சை மிளகாய் - 5
காய்ந்த மிளகாய் - 2
தக்காளி - 1
சின்ன வெங்காயம் - 100 கிராம்
இஞ்சி - பெரிய துண்டு
பூண்டு - 5 பல்
சீரகம் - 1 சிட்டிகை
பெருங்காயத்தூள் - 1/4 சிட்டிகை
மஞ்சள் தூள் - 1/2 சிட்டிகை
கடுகு - சிறிது
உளுந்தம்பருப்பு - சிறிது
நல்லெண்ணெய் - 1 தேக்கரண்டி
தேங்காய் - ஒரு மூடியில் பாதி துருவியது
உப்பு - தேவைக்கேற்ப
கறிவேப்பிலை - சிறிது
கொத்தமல்லி - சிறிது

mushroom,onion,garlic,coriander,ginger,garlic ,காளான், வெங்காயம், பூண்டு, கொத்தமல்லி, இஞ்சி, பூண்டு

செய்முறை: வாழைத்தண்டை நார் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கவும். சமைக்கும் வரை மோர் கலந்த நீரில் போட்டால் கறுத்துப் போகாமல் இருக்கும். ஒரு கடாயில் தண்ணீர் ஊற்றி பாசிப்பருப்புடன், மஞ்சள் தூள், சீரகம், எண்ணெய் சேர்த்து வேகவிடவும். பருப்பு சிறிது வெந்ததும் அதில் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு சேர்த்து நறுக்கிய வாழைத்தண்டை கலந்து தேவையான அளவு உப்பு சேர்த்து வேகவிடவும்.


வாழைத்தண்டு நன்கு வெந்ததும் அதனுடன் தேங்காய்த் துருவல் சேர்க்கவும். தனியாக வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுந்தம்பருப்பு, பெருங்காயத்தூள், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை என அனைத்தையும் சேர்த்து தாளித்து வாழைத்தண்டு கலவையில் ஊற்றவும்.


ஒருசேர கொதிக்கும் போது கொத்தமல்லி தூவி இறக்கவும். இஞ்சி பூண்டுதான் இதன் சிறப்பே. எனவே சற்று அதிகமாகவே சேர்த்துக்கொள்ளலாம்.

Tags :
|
|
|