- வீடு›
- சமையல் குறிப்புகள்›
- ஆரோக்கியம் அளிக்கும் கேரட் பணியாரம் செய்முறை உங்களுக்காக!!!
ஆரோக்கியம் அளிக்கும் கேரட் பணியாரம் செய்முறை உங்களுக்காக!!!
By: Nagaraj Sat, 12 Nov 2022 4:32:14 PM
சென்னை: உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கும் கேரட்டை வைத்து பணியாரம் செய்வது எப்படி என்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
கேரட் – 2
மைதா மாவு – ஒரு கப்
சீனி – தேவையான அளவு
பால் / தண்ணீர் – சிறிதளவு
செய்முறை: மிக்ஸியில் கேரட்டை போட்டு சிறிதளவு பால் சேர்த்து
அரைத்துக் கொள்ளவும். அரைத்த கேரட்டுடன் சீனி மற்றும் மைதா மாவு
சேர்க்கவும். அதனை கேக் மாவு பதத்திற்கு கலந்து கொள்ளவும். வாணலியில்
எண்ணெயை சூடானதும், மாவுக் கலவையை கையால் (அல்லது கரண்டியால்) சிறு
உருண்டையாக உருட்டிப் போடவும்.
மிதமான தீயில் வைத்து பொன்னிறமாக பொரித்தெடுக்கவும். சுவையான கேரட் பணியாரம் ரெடி.
Tags :
milk |
sugar |