Advertisement

உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கும் வெள்ளரிக்காய் ரொட்டி செய்முறை

By: Nagaraj Tue, 23 Aug 2022 11:38:29 AM

உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கும் வெள்ளரிக்காய் ரொட்டி செய்முறை

சென்னை: உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கும் வெள்ளரிக்காய் ரொட்டி செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்.

தேவையானவை
வெள்ளரிக்காய் – 1 1/2 கப்
தேங்காய் – 3/4 கப்
ரவை -1 கப்
கொத்தமல்லி இலை -சிறிதளவு
பச்சை மிளகாய் – 4
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு

cucumber,coconut,semolina,green chillies,coriander leaves ,வெள்ளரிக்காய், தேங்காய், ரவை, பச்சைமிளகாய், கொத்தமல்லி தழை

செய்முறை: முதலில் வெள்ளரிக்காய் மற்றும் தேங்காயை துருவி கொள்ள வேண்டும். பிறகு ஒரு பாத்திரத்தில் வெள்ளரிக்காய், ரவை, நறுக்கிய பச்சை மிளகாய், தேங்காய், கொத்தமல்லி ஆகியவை சேர்த்து சப்பாத்தி மாவு போல் பிசைந்து கொள்ள வேண்டும்.

ஒரு தவாவில் எண்ணெய் தேவையான அளவு ஊற்றி மாவை எடுத்து ரொட்டி போல் தட்டி கொள்ள வேண்டும். இரண்டு முதல் மூன்று நிமிடங்கள் நன்றாக வேகவைத்து பொன்னிறம் ஆகும் வேளையில் ரொட்டியை எடுத்துக்கோங்க. பத்தே நிமிடத்தில் சுவையான, சூடான, ஆரோக்கியமான வெள்ளரிக்காய் ரொட்டி தயார்.

Tags :