Advertisement

ஆரோக்கியம் நிறைந்த சீரக புலாவ் செய்முறை உங்களுக்காக!!!

By: Nagaraj Sat, 14 Oct 2023 10:48:22 AM

ஆரோக்கியம் நிறைந்த சீரக புலாவ் செய்முறை உங்களுக்காக!!!

சென்னை: ஆரோக்கியம் நிறைந்த சீரக புலாவ் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருள்கள்:
பாஸ்மதி அரிசி – 1 கப்இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 மேஜைக்கரண்டிஉப்பு – தேவையான அளவு

தாளிக்க தேவையான பொருட்கள்:
நெய் – 2 மேசைக்கரண்டிஎண்ணெய் – 2 மேஜைக்கரண்டிசீரகம் – 2 மேசைக்கரண்டிபிரிஞ்சி இலை – 1பட்டை – சிறிய துண்டுகிராம்பு – 2பெரிய வெங்காயம் – 1

cumin pulao,ghee,ginger,garlic,kuruma ,சீரக புலாவ், நெய், இஞ்சி, பூண்டு, குருமா

செய்முறை: வெங்காயத்தை நீள வாக்கில் நறுக்கி வைக்கவும். பாஸ்மதி அரிசியை அரை மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவும். அடுப்பில் குக்கரை வைத்து நெய், எண்ணெய் இரண்டையும் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, பிரிஞ்சி இலை போடவும். பட்டை பொன்னிறம் ஆனதும் சீரகம் போடவும்.

சீரகம் பொரிந்தவுடன் வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் பொன்னிறமானதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும். பச்சை வானசை போனதும் ஊறவைத்துள்ள பாஸ்மதி அரிசியை சேர்த்து அதனுடன் 2 கப் தண்ணீரும் உப்பும் சேர்த்து நன்றாக கலக்கி மூடி போட்டு மூடவும்.

நீராவி வந்ததும் வெயிட் போடவும். முதல் விசில் வந்ததும் அடுப்பை சிம்மில் வைத்து 10 நிமிடம் கழித்து அடுப்பை ஆப் பண்ணவும். நீராவி அடங்கியதும் மூடியை திறந்து நன்றாக கிளறி பாத்திரத்திற்கு மாற்றி விடவும். சுவையான சீரக புலாவ் தயார். குருமா வகைகளுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

Tags :
|
|
|