Advertisement

ஆரோக்கியம் நிறைந்த ஆளி விதை லட்டு செய்முறை

By: Nagaraj Fri, 17 June 2022 6:39:27 PM

ஆரோக்கியம் நிறைந்த ஆளி விதை லட்டு செய்முறை

சென்னை: வட இந்திய வீடுகளில் பசு நெய், பாதாம் பிசின் ஆகியவற்றைப் பயன்படுத்தி, பல்வேறு லட்டு வகைகள் குளிர்க் காலங்களில் பிரத்யேகமாக தயாரிக்கிறார்கள். உண்பதற்கு அற்புதமாக இருக்கும் லட்டுகளில் பல்வேறு ஆரோக்கியமான நன்மைகளும் உள்ளன. வீட்டிலேயே ஆரோக்கியமான லட்டு செய்வது எப்படி என்று தெரிந்து
தேவையான பொருள்கள்:
அரை கப் - பாதாம்அரை கப் - முந்திரிஅரை கப் - அரைத்த ஆளி விதைஅரை கப் - அரைத்த வெல்லம்கால் கப் - பசு நெய்

jaggery,flaxseed,cow ghee,laddu,almonds,cashews ,வெல்லம், ஆளிவிதை, பசு நெய், லட்டு, பாதாம், முந்திரி

செய்முறை:மிக்ஸியிலோ, ப்ளேண்டரிலோ, பாதாமைப் போட்டு, முழுவதும் பொடியாகும் வரை அரைக்க வேண்டும். அதனைத் தனியாக பாத்திரம் ஒன்றில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்ததாக முந்திரியையும் பாதாம் போலவே அரைத்து, தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். மற்றொரு பாத்திரத்தில், நாம் ஏற்கனவே அரைத்த பாதாம், முந்திரி ஆகியவற்றுடன் அரைத்த ஆளி விதை, அரைத்த வெல்லம் ஆகியவற்றைச் சேர்த்து, அதனோடு பசு நெய்யையும் சேர்த்து, நன்கு பிசைய வேண்டும்.

தற்போது அதனை சிறிய பந்து வடிவத்தில் கையால் பிடித்து வைக்க வேண்டும். உலர்ந்து போனால் சிறிது நெய் சேர்க்கலாம். மற்றபடி அதிகம் நெய் சேர்க்காமல், லட்டுக்குத் தேவையான அளவில் அதனை உருட்ட வேண்டும். தற்போது லட்டுகள் தயார். இவற்றைக் காற்று புகாத பிளாஸ்டிக் கண்டெய்னரில் போட்டு வைக்கவும். இவை ஆரோக்கியம் நிறைந்தவை.

Tags :
|