Advertisement

ஆரோக்கியம் நிறைந்த இடியாப்பம் சொதி செய்முறை உங்களுக்காக!!!

By: Nagaraj Sat, 05 Aug 2023 12:23:51 PM

ஆரோக்கியம் நிறைந்த இடியாப்பம் சொதி செய்முறை உங்களுக்காக!!!

சென்னை: இடியாப்பம் சொதி செய்து பார்த்து இருக்கிறீர்களா. எளிதில் ஜீரணம் ஆகி விடும். உடலுக்கும் ஆரோக்கியம். அதை எப்படி செய்வது என்று பார்ப்போம் வாங்க.

தேவையானவை: இட்லி அரிசி கால் கிலோ, எண்ணெய் ஒரு ஸ்பூன், உப்பு தேவையான அளவு.

beans,carrots,bell peppers,coconut milk,edamame ,பீன்ஸ், கேரட், குடமிளகாய், தேங்காய்ப்பால், இடியாப்பம்

செய்முறை: அரிசியை மூன்று மணி நேரம் ஊறவைத்துக் களைந்து, சிறிது தண்ணீர் விட்டு, கிரைண்டரில் நைஸாக அரைக்கவும். கடாயில் சிறிது எண்ணெய் விட்டு மாவை, தோசைமாவுப் பதத்தில் கரைத்து உப்பு சேர்த்து மிதமான வெப்பத்தில் அடுப்பில் வைத்து கெட்டியாகக் கிளறவும்.

ஆறியதும் நீளவாக்கில் மாவை நன்றாகப் பிசைந்து உருட்டி வைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் (உருண்டைகள் மூழ்கும் அளவுக்கு) விட்டு நன்றாகக் கொதிக்கவிடவும். உருண்டைகளைப் போட்டு நன்றாக வெந்ததும், இடியாப்ப அச்சில் ஒவ்வொன்றாகப் போட்டுப் பிழிந்துகொள்ளவும்.

சொதி: 6 பீன்ஸ், 1 கேரட், 1 குடமிளகாய் மூன்றையும் நீளவாக்கில் நறுக்கி, சிறிது எண்ணெய் விட்டு வதக்கி, உப்பு சேர்த்து வேகவிடவும். நன்றாக வெந்ததும் 100 மி.லி தேங்காய்ப்பால் சேர்க்கவும். சிறிது எண்ணெயில் கடுகு தாளித்து இறக்கவும்.

Tags :
|