Advertisement

ஆரோக்கியம் நிறைந்த சுண்டைக்காய் புளிக்குழம்பு செய்முறை

By: Nagaraj Thu, 09 Feb 2023 08:56:14 AM

ஆரோக்கியம் நிறைந்த சுண்டைக்காய் புளிக்குழம்பு செய்முறை

சென்னை: சுண்டைக்காயில் ருசியான புளிக்குழம்பு செய்வோமா. உடலுக்கும் சுண்டைக்காயால் ஆரோக்கியம்தானே. வாங்க செய்வோம்.

தேவையான பொருட்கள் :
சுண்டைக்காய் = 200 கிராம்வெங்காயம் = 100கிராம்மிளகாய் = 3 பீஸ்புளி = எலுமிச்சை பழ அளவுகறிவேப்பிலை = சிறிதுமிளகாய் வற்றல் = 6 பீஸ்சீரகம் = 2 ஸ்பூன்பூண்டு = 1 பீஸ்அரிசி மாவு = 1 ஸ்பூன்மஞ்சள்துாள் = 1 ஸ்பூன்உப்பு மற்றும் எண்ணெய் = தேவையான அளவுகடுகு, வெந்தயம் = சிறிதளவு

chillies,onion,pumpkin,turmeric, ,சுண்டைக்காய், புளி, மிளகாய், வெங்காயம்

செய்முறை: முதலில் மசாலா பொருட்களை எண்ணையில் வறுத்து வைக்கவும். வறுத்த மசாலா பொருட்களை அரைத்துக் கொள்ளவும். சுண்டைக்காயை சுத்தம் செய்து வைக்கவும். புளியை கரைத்துக் கொள்ளவும்.

சுண்டைக்காயுடன் போதுமான தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து வேக விடவும். வெந்தவுடன் புளித்தண்ணீர் சேர்த்து கலக்கவும். பிறகு மசாலா பொருட்களையும் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து கிளறி இறக்கவும். இப்போது சூடான சுண்டைக்காய் புளிக்குழம்பு ரெடி!!!

Tags :
|