Advertisement

ஆரோக்கியம் நிறைந்த சிவப்பு அவலில் காரப்பொங்கல் செய்முறை

By: Nagaraj Mon, 05 June 2023 7:08:12 PM

ஆரோக்கியம் நிறைந்த சிவப்பு அவலில் காரப்பொங்கல் செய்முறை

சென்னை: ஆரோக்கியம் நிறைந்த சிவப்பு அவலில் காரப்பொங்கல் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்வோம் வாங்க.

தேவையானவை :
சிவப்பு அவல் - 200 கிராம் (ஊறவைக்கவும்),வேகவைத்த பாசிப்பருப்பு - 100 கிராம்,பச்சை மிளகாய் - 4,சீரகம் - அரை ஸ்பூன்,மிளகு - சிறிதளவு,பெருங்காயத் தூள் - ஒரு ஸ்பூன்கறிவேப்பிலை - சிறிதளவு,நெய் - 3 ஸ்பூன்,உப்பு - தேவையான அளவு.

red aval,cumin,fenugreek,green chillies,curry leaves ,சிவப்பு அவல், சீரகம், பெருங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை

செய்முறை: கடாயில் நெய் விட்டு சீரகம், பெருங்காயம், கீறிய பச்சை மிளகாய், மிளகு, கறிவேப்பிலை தாளிக்கவும்.

வேகவைத்த பாசிப்பருப்பு, உப்பு, ஊறவைத்த சிவப்பு அவல் சேர்த்து, சிறிதளவு நீர் விட்டு, அவல் சிதையா வண்ணம் கிளறி இறக்கவும். சுவையான சிவப்பு அவல் காரப் பொங்கல் ரெடி.

Tags :
|