Advertisement

உடல் ஆரோக்கியத்திற்கு உறுதுணை செய்யும் கம்பு சோறு செய்முறை

By: Nagaraj Sat, 29 Oct 2022 11:17:09 PM

உடல் ஆரோக்கியத்திற்கு உறுதுணை செய்யும் கம்பு சோறு செய்முறை

சென்னை: நல்ல குளிர்ச்சியையும், நோய் எதிர்ப்பு சக்தியையும் தரும் தன்மை கம்புக்கு உண்டு. அதுமட்டுமா. உடல் ஆரோக்கியத்தையும் உயர்த்தும். சரி இதில் சாதம் செய்வோமா. எப்படின்னு பார்ப்போம்

தேவையானவை

கம்பு - 100 கிராம்
உப்பு, தண்ணீர் - தேவையான அளவு

cool,dry,scald,rinse,salt ,குளிர்ச்சி, கம்பு, வெந்துவிடும், துவையல், உப்பு

செய்முறை: கம்பை சுத்தம் செய்து லேசாக நீர் தெளித்து ரவை போல கொரகொரப்பாக அரைக்கவும். ஒரு பாத்திரத்தில் அரை லிட்டர் தண்ணீரை வைத்து கொதிக்க விடவும்.

அரைத்த கம்பை தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு கரைத்துக் கொள்ளவும். கொதிக்கும் தண்ணீரில் கரைத்து வைத்திருக்கும் கம்பை ஊற்றி கிளறவும். சில நிமிடங்களில் கம்பு வெந்துவிடும். இரவு இதே போல் செய்துவிட்டு மறுதினம் காலையில் பார்த்தால் அருமையாக இருக்கும். அதில் தயிர் கலந்து சாப்பிடலாம். வயிற்றிற்கு நல்ல குளிர்ச்சியை தரும். துவையல் இதற்கு பொருத்தமாக இருக்கும்.

Tags :
|
|
|
|