Advertisement

ஆரோக்கியம் நிறைந்த வெஜிடபிள் கீரை பிடி கொழுக்கட்டை செய்முறை

By: Nagaraj Mon, 05 Oct 2020 09:46:21 AM

ஆரோக்கியம் நிறைந்த வெஜிடபிள் கீரை பிடி கொழுக்கட்டை செய்முறை

மிகவும் ஆரோக்கியம் நிறைந்த வெஜிடபிள் கீரை பிடி கொழுக்கட்டை செய்து கொடுத்து உங்கள் குடும்பத்தினரின் ஆரோக்கியத்தை உயர்த்துங்கள்.

தேவையானவை:

அரிசி - 200 கிராம்,
முளைக்கீரை- இரண்டு கைப்பிடி அளவு (நறுக்கியது),
கேரட்- ஒரு சிறிய கப் (நறுக்கியது),
பீன்ஸ் - 100 கிராம்,
குடமிளகாய்-ஒன்று,
இஞ்சி- ஒரு சிறிய துண்டு,
பச்சை மிளகாய் - 2,
கடுகு, உளுத்தம்பருப்பு,
பெருங்காயத்தூள்-சிறிதளவு,
எண்ணெய் - 50 மில்லி,
உப்பு தேவையான அளவு.

rice,sprouts,carrots,beans,chives ,
அரிசி, முளைக்கீரை, கேரட், பீன்ஸ், குடமிளகாய்

செய்முறை: அரிசியை ரவை போல மிக்ஸியில் உடைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து... தோல் சீவி, பொடியாக நறுக்கிய இஞ்சி, நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

சிறிது வதங்கியவுடன் நறுக்கிய கீரை, கேரட், குடமிளகாய், பீன்ஸ், உப்பு சேர்த்து மேலும் வதக்கவும். ஒரு பங்கு அரிசி ரவைக்கு இரு பங்கு என்ற அளவில் தண்ணீர் விட்டு, பெருங்காயத்தூள் சேர்த்துக் கொதிக்கவிடவும். தண்ணீர் நன்கு கொதித்ததும் அரிசி ரவையை சேர்த்துக் கிளறி வேகவிட்டு எடுக்கவும்.

இந்தக் கலவை நன்கு ஆறியவுடன் சிறு உருண்டைகளாக உருட்டி, இட்லித் தட்டில் வைத்து ஆவியில் வேகவிட்டு எடுக்கவும். அருமையான சுவையில் வெஜிடபிள் கீரை பிடி கொழுக்கட்டை தயார்.

Tags :
|
|