Advertisement

சமையலறை சிம்னியை சுத்தம் செய்ய சில யோசனைகள் உங்களுக்காக!!!

By: Nagaraj Sat, 20 May 2023 7:35:33 PM

சமையலறை சிம்னியை சுத்தம் செய்ய சில யோசனைகள் உங்களுக்காக!!!

சென்னை: சமையலறை சிம்னியை சுத்தம் செய்ய டிப்ஸ்... வீட்டின் ஏனைய அறைகளைக் காட்டிலும் சமையலறை சுவறில் வேகமாக கறை படிவதற்கு வாய்ப்பு அதிகம். காரணம், புகை மற்றும் நீராவி. சமைக்கும் போது உருவாகும் புகை மற்றும் நீராவியை சிறப்பாக வெளியேற்றி, சுவர்களின் வண்ணத்தை பாதுகாக்கும் கருவி சிம்னி.

இதுமட்டும் அல்ல மிளகாய் நெடியால் வீட்டில் உள்ளவர்களுக்கு இருமல் தும்மல் ஏற்படாமல் காப்பாற்றுவதும் சிம்னி தான். மற்ற வீட்டு உபயோக கருவிகளை சுத்தம் செய்வது போல இதையும் சுத்தம் செய்வது அவசியம். சமையலறை சுவர்களை தூய்மையாக வைத்திருக்க உதவும் சிம்னியை சுத்தம் செய்வது எப்படி என்பதை பார்ப்போம்.

சமைக்கும் போது உருவாகும் புகை மற்றும் நீராவியை வெளிவேற்றுவது தான் சிம்னியின் பணி . இவற்றை வெளியேற்றும் போது புகை மற்றும் நீராவியில் இருக்கும் நீர்த்துளிகள், கரி துகள்கள், எண்ணெய் பிசுபிசுப்பு இவை சிம்னியில் உள்ள நுண்ணிய துளைகள் கொண்ட பல அடுக்கு வலைகளில் வடிகட்டப்படும்.

clean,kitchen,neat , சமையலறை, சிம்னி, தூய்மை

இவ்வாறு சேரும் இந்த அழுக்கினால் இரண்டு தீமைகள் நேரும். ஒன்று, நோய் கிருமி மற்றும் பூஞ்சை காளான் உருவாகும். இதனால் வீட்டில் உள்ள வயதானவர்கள் மற்றும் சிறுவர்களுக்கு நோய் வருவதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளது.

இரண்டு, சிம்னி வழியாக புகை வெளியேறுவது தடைபடும். வீட்டில் உள்ளவர்களின் உடல் நலத்தை பாதுகாக்க சிம்னியை சுத்தம் செய்வது எவ்வளவு அவசியம் என்பது புரியும். சரி, எத்தனை நாட்களுக்கு ஒரு முறை சிம்னி தூய்மை செய்ய வேண்டும்? பொதுவாக 2 மாதத்திற்கு ஒரு முறை சிம்னியில் உள்ள வடிகட்டும் வலைகளை தூய்மை செய்ய வேண்டும். ஒரு வேலை நீங்கள் அதிகம் எண்ணெய் மற்றும் கார சாரமான உணவு வகைகளை அடிக்கடி சமைப்பவராக இருந்தால், மாதம் ஒரு முறை சுத்தம் செய்ய வேண்டும்.

நீங்கள் சார்க்கோள் பில்டர் சிம்னி பயன்படுத்தினால் 6 மாத்திற்கு ஒரு முறை பில்டரை மாற்ற வேண்டும். இனி சிம்னியை எப்படி சுத்தம் செய்வது என்பதை பற்றி பார்ப்போம். சிம்னியை தூய்மை செய்ய அதை அக்கு வேறு ஆணி வேறாக பிரிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.

சிம்னியில் உள்ள வடிகட்டிகள், வலைகள், தட்டைகள் மற்றும் அதன் மூடி இவற்றை சுத்தம் செய்தால் போதும். நீங்கள் எந்த பாகத்தை தூய்மை செய்கிறீர்கள் என்பதை பொறுத்து தேவைபடும் பொருட்கள் மாறுபடும். சிம்னியின் மூடியை தூய்மை செய்கிறீர்கள் என்றால் வினிகர் மற்றும் பேக்கிங் சோடா தேவைப்படும்.

Tags :
|