Advertisement

இட்லி, தோசை, சப்பாத்திக்கு புதுவிதமான சூப்பரான சிம்பிளான சைட் டிஷ் இதோ

By: vaithegi Wed, 02 Aug 2023 12:21:15 PM

இட்லி, தோசை, சப்பாத்திக்கு புதுவிதமான சூப்பரான சிம்பிளான சைட் டிஷ் இதோ

கொத்தமல்லி சட்னியில் தேங்காய்க்கு பதிலாக இந்த 1 பொருளை போடுங்க. டேஸ்ட் சும்மா சூப்பராக இருக்கும் .. கொத்தமல்லி சட்னி. இது உடலுக்கு ஆரோக்கியம் தரும் சட்னி. நாம் எல்லோரும் கொத்தமல்லி சட்டையை தேங்காய் வைத்து அரைத்து தானே சாப்பிடுவோம் ஆனால் இன்று தேங்காய் இல்லாமல், புதுவிதமாக ஒரு பொருளை சேர்த்து அரைத்து சாப்பிட போகின்றோம்.

செய்முறை:
கொத்தமல்லி தழைகளோடு, வேர்க்கடலையை சேர்த்து தான் சட்னி அரைக்க போகின்றோம். அடுப்பில் ஒரு கடாயை வைத்துக் கொள்ளுங்கள். பச்சை வேர்க்கடலையாக இருந்தால் 50 கிராம், அந்த கடாயில் போட்டு நன்றாக மொறு மொறுப்பாக வறுக்க வேண்டும். வேர்க்கடலையில் இருக்கக்கூடிய தோல் உரிந்து வரும் அளவிற்கு வேர்க்கடலையை வறுத்து தனியாக ஒரு தட்டில் கொட்டி ஆரவைத்துக் கொள்ளுங்கள்.

இதையடுத்து உங்கள் வீட்டில் வறுத்த வேர்க்கடலை இருந்தால் அது மொறு மொறுப்பாக இருந்தால் அதை அப்படியே சட்னி செய்ய பயன்படுத்தலாம். இல்லையென்றால் வானொலியில் போட்டு லேசாக சூடு செய்து, ஆற வைத்துக் கொள்ளவும். அடுத்து அதே கடாயில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, பெரிய பூண்டு பல் 4, பச்சை மிளகாய் 3, கோலி குண்டு அளவு புளியை, போட்டு பச்சை வாடை நீங்க வதக்கி விட்டு, இதில் சுத்தம் செய்து கழுவி தண்ணீரை வடித்த 2 கைப்பிடி அளவு கொத்தமல்லி தழைகளை போட்டு 1 நிமிடம் போல வதக்கி, உடனடியாக அடுப்பை அணைத்து விடுங்கள். (பச்சை மிளகாய் வேண்டாம் என்பவர்கள் வர மிளகாய் கூட பயன்படுத்தலாம்.)

side dish,coriander ,சைட் டிஷ் ,கொத்தமல்லி


இப்போது இந்த விழுது நன்றாக ஆறியதும் மிக்ஸி ஜாரில் முதலில் வறுத்து வைத்திருக்கும் வேர்க்கடலையை போட்டு, ஒரு ஓட்டு ஓட்டிக்கோங்க. பிறகு ஒன்றும் பாதியுமாக அந்த வேர்க்கடலை அரைபட்டு இருக்கும். இதற்கு அடுத்தபடியாக கடாயில் ஆற வைத்திருக்கும் பூண்டு மிளகாய் புளி, கொத்தமல்லி தழையை சேர்த்து கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி, உப்பு தேவையான அளவு போட்டு சட்னி போல நைசாக அரைத்து ஒரு கிண்ணத்தில் மாற்றிக் கொள்ளவும்.

ரொம்பவும் தண்ணீராக கரைக்க வேண்டாம். ரொம்பவும் திக்காகவும் இருக்க வேண்டாம். வெங்காய சட்னி போல தளதளவென சட்னியை தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள். அடுப்பில் ஒரு தாளிப்பு கரண்டியை வைத்து 2 ஸ்பூன் நல்லெண்ணெயில், கடுகு, உளுந்து, கருவேப்பிலை, பெருங்காயம், வரமிளகாய், தாளித்து இந்த சட்னியில் கொட்டி கலந்து பரிமாறி பாருங்கள். அது வேற லெவல் டெஸ்ட்ங்க.

Tags :