Advertisement

வீட்டிலேயே தயாரித்து தாருங்கள் வெஜிடபிள் ஆம்லெட் சாண்ட்விச்

By: Nagaraj Sat, 15 July 2023 12:42:53 PM

வீட்டிலேயே தயாரித்து தாருங்கள் வெஜிடபிள் ஆம்லெட் சாண்ட்விச்

சென்னை: அருமையான ருசியில் வீட்டிலேயே செய்வோமா வெஜிடபிள் ஆம்லெட் சாண்ட்விச். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

தேவையான பொருட்கள்:
கடலை மாவு- 2 கப்நறுக்கிய வெங்காயம்- 1 கப்பொடியாக நறுக்கிய தக்காளி- 1 கப்மிளகாய்த்தூள்-1 தேக்கரண்டிஉப்பு- தேவையான அளவுபொடியாக நறுக்கிய புதினா அல்லது கொத்தமல்லி- 3 மேசைக்கரண்டிவெண்ணெய்- தேவையான அளவு

butter,bread,vegetable,omelette,sandwich ,வெண்ணெய், பிரெட், வெஜிடபிள், ஆம்லேட், சாண்ட்விச்

செய்முறை : கடலை மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்து, நறுக்கிய வெங்காயம், தக்காளி, மிளகாய்த்தூள், உப்பு, புதினா கலந்து போதுமான நீர் சேர்த்து தோசைமாவை விடச் சற்று நீர்க்கக் கலந்து கொள்ளவும்.

பிறகு தோசைக்கல்லைச் சூடு செய்து, சிறு சிறு குட்டி தோசைகளாக ஊற்றிப் பொன்னிறமாகச் சுட்டு எடுத்து வைக்கவும். பிறகு இரு புறமும் வெண்ணெய் தடவிய ப்ரெட் ஸ்லைஸ்களின் நடுவே இந்த ஆம்லெட்டை சூடாக வைத்து கையால் அழுத்தவும்.

சுவையான வெஜிடபிள் ஆம்லெட் சாண்ட்விச் ரெடி. இந்த வெஜிடெபிள் ஆம்லெட்டை பிரெட்டிற்கு நடுவில் வைக்காமல் பிளைன் ஆம்லெட்டாகவும் பரிமாறலாம்.

Tags :
|
|