Advertisement

அன்னாசிப்பழ புட்டிங் செய்து சுவைத்து மகிழுங்கள்!

By: Monisha Wed, 17 June 2020 3:50:37 PM

அன்னாசிப்பழ புட்டிங் செய்து சுவைத்து மகிழுங்கள்!

அன்னாசிப்பழம் வைத்து ஒரு சூப்பரான ரெசிபி செய்யலாம். அந்த ரெசிபி பெயர்தான் அன்னாசிப்பழ புட்டிங். மிகவும் சுவையான இந்த ரெசிபியை நீங்களும் செய்து சுவைத்து மகிழுங்கள்.

தேவையான பொருட்கள்:
அன்னாசிப்பழம் – 1
கஸ்டர்ட் பவுடர் – 2 டேபிள் ஸ்பூன்
பால் பவுடர் – 7 டேபிள் ஸ்பூன்
சீனி – 7 டேபிள் ஸ்பூன்
பொடித்த முந்திரி பருப்பு + முந்திரி பழம் – 1/4 கப்
அன்னாசி எஸன்ஸ் – 1/2 டீ ஸ்பூன்

pineapple,pudding,custard powder,recipe,milk powder ,அன்னாசிப்பழம்,புட்டிங்,கஸ்டர்ட் பவுடர்,ரெசிபி,பால் பவுடர்

செய்முறை
அன்னாசிப்பழத்தை தோல் சீவி மிகவும் சிறு துண்டுகளாக வெட்டவும். கஸ்டர்ட் பவுடரினுள் 5 டேபிள் ஸ்பூன் தண்ணீ­ர் விட்டு கட்டி இல்லாமல் கரைக்கவும். அதனுள் சீனியை சேர்த்து மிக்ஸியில் போட்டு நன்கு அடிக்கவும். அதனுள் சிறிது சிறிதாக பால் பவுடரையும் சேர்த்து அடிக்கவும்.

பின்னர் இக்கலவையை ஒரு பாத்திரத்தில் ஊற்றி பொடித்த முந்திரி பருப்பு, முந்திரி பழம் அன்னாசி எஸன்ஸ் போட்டு கலக்கவும். பின்னர் இக்கலவையில் சிறிதை ஒரு உருண்டையான கிண்ணத்தில் ஊற்றி அதன் மேல் அன்னாசி துண்டுகளைப் போடவும். இவ்வாறு மாறி மாறி ஊற்றவும்.

pineapple,pudding,custard powder,recipe,milk powder ,அன்னாசிப்பழம்,புட்டிங்,கஸ்டர்ட் பவுடர்,ரெசிபி,பால் பவுடர்

பின்னர் இதனை ஆவியில் வைத்து அவித்தெடுக்கவும். (அல்லது 10 நிமிடங்கள் மைக்ரோ அவனில் பேக் செய்யவும்). சுவையான அன்னாசி புட்டிங் தயார். இதனை குளிர வைத்து துண்டுகளாக்கி பரிமாறவும்.

குறிப்பு: அன்னாசிப்பழத்திற்கு பதிலாக ஆப்பிள், மாம்பழம், ஸ்ட்ராபெர்ரி. வாழைப்பழம் என ஏனைய பழங்களும் அதற்கேற்றவாறு பழ எஸன்ஸூம் சேர்க்கலாம். அசைவம் உண்பவர்கள் கஸ்டர்ட் பவுடருக்கு பதிலாக 1 முட்டையும் சேர்க்கலாம்.

Tags :
|