Advertisement

டிரை ஃப்ரூட் சிக்கி செய்வது எப்படி ?

By: Karunakaran Tue, 17 Nov 2020 7:21:22 PM

டிரை ஃப்ரூட் சிக்கி செய்வது எப்படி ?

குழந்தைகளுக்கு சத்தான ஸ்நாக்ஸ் கொடுக்க விரும்பினால் டிரை ஃப்ரூட்ஸ் வைத்து டிரை ஃப்ரூட் சிக்கி செய்து கொடுக்கலாம்.

தேவையான பொருட்கள்

பாதாம் - கால் கப்
முந்திரி - கால் கப்
வறுத்த வேர்க்கடலை - கால் கப்
வறுத்த வெள்ளை எள் - கால் கப்
பொடித்த வெல்லம் - ஒரு கப்
நெய் - ஒரு டேபிள் ஸ்பூன்

rid,dry fruit,snacks,sweets ,ரிட், உலர் பழம், தின்பண்டங்கள், இனிப்புகள்

செய்முறை

முதலில் பாதாம், முந்திரி, வறுத்த வேர்க்கடலையை பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும். அடிகனமான பாத்திரத்தில் நெய் விட்டு உருக்கி, வெல்லம் சேர்த்து கிளற வேண்டும். வெல்லம் கரைந்ததும் அடுப்பை சிறுதீயில் வைத்து பாதாம், முந்திரி, வேர்க்கடலை, எள் சேர்த்து இரண்டு நிமிடங்கள் கிளற வேண்டும்.

பிறகு இதை சுத்தமான நெய் தடவிய சமையல் மேடையில் கொட்டி கனமாக தேய்க்க வேண்டும். ஐந்து நிமிடங்களுக்கு பிறகு துண்டுகளாக்கி காற்றுப்புகாத டப்பாவில் சேகரிக்க வேண்டும். பின்னர் இதனை குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸாக கொடுக்கலாம்.

Tags :
|
|