Advertisement

கமகமக்கும் நெத்திலி மீன் குழம்பு செய்வது எப்படி?

By: Monisha Wed, 28 Oct 2020 09:39:07 AM

கமகமக்கும் நெத்திலி மீன் குழம்பு செய்வது எப்படி?

உங்கள் வீட்டிலேயே அற்புதமான சுவையை கொண்ட கமகமக்கும் நெத்திலி மீன் குழம்பு எப்படி செய்வது என்று இந்த பதிவில் பார்ப்போம்

தேவையான பொருட்கள்
நெத்திலி மீன் 1/2 கிலோ
பச்சை மிளகாய் 3

அரைக்க
தேங்காய் 1
ஜீரகம் 1/2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் 1/2 டேபிள் ஸ்பூன்
வத்தல் பொடி 2 டேபிள் ஸ்பூன்
மல்லி பொடி 2 டேபிள் ஸ்பூன்
வெந்தய பொடி 1/2 டேபிள் ஸ்பூன்
புளி நெல்லிக்காய் அளவு
வெள்ளை பூண்டு பல் 5எண்ணம்

தாளிக்க
எண்ணெய் சிறிதளவு
கடுகு
கறிவேப்பிலை
வத்தல் மிளகாய் 3

anchovies,broth,coconut,garlic,tamarind ,நெத்திலி மீன்,குழம்பு,தேங்காய்,பூண்டு,புளி

செய்முறை
முதலில் நெத்திலி மீனை தலை மற்றும் வாலை எடுத்துவிட்டு மீனை நன்றாக கழுவி வைத்து கொள்ளுங்கள். தேங்காய், ஜீரகம், மஞ்சள், வத்தல் பொடி, மல்லி பொடி, வெந்தயப்பொடி, புளி மற்றும் வெள்ளை பூண்டை நன்றாக மையாக அரைத்து எடுத்து வைத்து கொள்ளுங்கள்.

ஒரு சட்டியில் கழுவிய நெத்திலி மீனை இட்டு அரைத்த மசாலாவை சேர்த்து கூடவே சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து தேவைக்கு தண்ணீர் விட்டு நன்றாக கலக்கி கொள்ளுங்கள். வெட்டி வைத்திருக்கும் பச்சை மிளகாயை சேர்த்து அடுப்பில் வைத்து வேகவையுங்கள்.

ஒரு அரை மணிநேரம் நன்றாக வேகவேண்டும். அரை மணி நேரம் நன்றாக வெந்த பிறகு அடுப்பை அணைத்து விடுங்கள். பிறகு ஒரு பாத்திரத்தில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்தவுடன் கடுகு போட்டு கடுகு பொட்டியவுடன் வத்தல் மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிப்பை நெத்திலி மீன் குழம்பில் சேர்த்து கொள்ளுங்கள். சுவையான கமகமக்கும் நெத்திலிமீன் குழம்பு ரெடி.

Tags :
|
|