Advertisement

வீட்டிலேயே ஆப்பிள் ஜாம் தயாரிக்கும் முறை

By: Nagaraj Tue, 15 Nov 2022 10:00:52 PM

வீட்டிலேயே ஆப்பிள் ஜாம் தயாரிக்கும் முறை

சென்னை: நாம் வீட்டிலேயே சுவையான சத்தான ஆப்பிள் ஜாமை எப்படி தயாரிப்பது என்பதை தெரிந்து கொள்வோம்.

தேவையானவை
ஆப்பிள் - 1 கிலோ
சர்க்கரை பொடி - 500 கிராம்
எலுமிச்சை - சுவைக்கேற்ப
ஏலக்காய் பொடி - 1 டீஸ்பூன்
இலவங்கப்பட்டை பொடி - ½ டீஸ்பூன் (தேவைப்பட்டால்)

apple,cardamom powder,lemon juice,sugar ,ஆப்பிள், ஏலக்காய் பொடி, எலுமிச்சை சாறு, சர்க்கரை

செய்முறை: ஆப்பிள் ஜாம் செய்ய, ஆப்பிளை நறுக்கி விதை நீக்கிக்கொள்ளவும். ஒரு பாத்திரம் நிறைய நீர் ஊற்றி, ஒரு நாள் முழுவதும் ஆப்பிளை ஊறவைத்து விடவும். அடுத்த நாள், அதே பாத்திரத்தை அடுப்பில் வைத்து அவை மிருதுவாகும் வரை கொதிக்க விடவும். அவை கொதித்ததும், நீரை வடிகட்டிவிட்டு மிக்ஸர் ஜாரில் போட்டு நன்றாக அரைக்கவும்.


கடாயில் சர்க்கரை மற்றும் ஆப்பிளை சேர்த்து, சர்க்கரை கரையும் வரை வைத்திருக்கவும். இப்போது ஏலக்காய் பொடி, எலுமிச்சை சாறு மற்றும் இலவங்கப்பட்டை பொடி சேர்த்து சிறிது நேரம் வைத்திருந்து, அடுப்பை அணைக்கவும். அட்டகாசமான ஆப்பிள் ஜாம் ரெடி. இதை ஒரு பாட்டிலில் நிரப்பி, ஃபிரிட்ஜில் வைத்து பயன்படுத்தலாம்.

Tags :
|