Advertisement

சத்தான அவகாடோ ஐஸ் கிரீம் ஈஸியாக செய்யலாம் வாங்க!

By: Monisha Sat, 13 June 2020 1:47:36 PM

சத்தான அவகாடோ ஐஸ் கிரீம் ஈஸியாக செய்யலாம் வாங்க!

குழந்தைகளுக்கு ஐஸ்கிரீம் என்றால் கொள்ளை பிரியம். இனி நீங்களே உங்கள் குழந்தைகளுக்கு விதவிதமாக ஐஸ்கிரீம் செய்து கொடுத்து அசத்தலாம். இன்றைக்கு சத்தான அவகாடோ ஐஸ் கிரீம் எப்படி ஈஸியாக செய்வது என்று பார்க்கலாம்.

என்னென்ன தேவை?
அவகாடோ – 2
ஹெவி கிரீம் – 1 + 1/2 கப்
கன்டென்ஸ்டு மில்க் – தேவையான அளவு
வெண்ணிலா எசன்ஸ் – 2 தேக்கரண்டி

ice cream,avocado ice cream,heavy cream,condensed milk,vanilla essence ,ஐஸ் கிரீம்,அவகாடோ ஐஸ் கிரீம்,ஹெவி கிரீம்,கன்டென்ஸ்டு மில்க்,வெண்ணிலா எசன்ஸ்

எப்படிச் செய்வது?
ஹெவி கிரீம் செய்ய...ஒரு பாத்திரத்தை சூடு செய்து வெண்ணெயை உருக்கி ஆற விடவும். இத்துடன் பால் சேர்த்து ஹான்டு பீட்டர் கொண்டு நன்கு அடிக்கவும். இதை ஃப்ரிட்ஜில் வைத்து 2 நாட்கள் வரை பயன்படுத்தலாம். அல்லது ஒரு பாத்திரத்தில் பாலை கொதிக்க வைத்து, மேலே படிந்து வரும் ஆடைகளை எடுத்து ஒரு பாத்திரத்தில் போடவும். சேகரித்த பால் ஆடைகளை மிக்சியில் ஒரு சுற்று சுற்றி இறக்கவும். ஹெவி கிரீம் தயார்.

முதலில் அவகாடோவை 1 கப் கிரீமுடன் சேர்த்து மசித்து வைக்கவும். ஒரு பெரிய கிண்ணத்தில் அவற்றை மாற்றி அத்துடன் கன்டென்ஸ்டு மில்க், கிரீம் சேர்த்து ஹான்ட் பீட்டர் கொண்டு நுரைக்க அடிக்கவும். வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து நன்றாக கலந்து 5 முதல் 6 மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து எடுக்கவும். சுவையான சத்தான அவகாடோ ஐஸ் கிரீம் ரெடி.

Tags :