Advertisement

பீட்ருட் பொரியல் சாப்பிடாத குழந்தைகளுக்கு பீட்ருட் அல்வா!

By: Monisha Tue, 15 Sept 2020 10:19:37 AM

பீட்ருட் பொரியல் சாப்பிடாத குழந்தைகளுக்கு பீட்ருட் அல்வா!

உங்கள் செல்ல குழந்தைகள் பீட்ருட் பொரியல் சாப்பிடவில்லையா? அவர்களுக்காக சுவையான பீட்ருட் அல்வா செய்து கொடுங்கள் விரும்பி சாப்பிடுவார்கள்.

தேவையான பொருட்கள்
பீட்ருட் - 1/2 கிலோ
முந்திரிப்பருப்பு - 50 கிராம்
நெய் - 200 கிராம்
பசும்பால் - 1/2 லிட்டர்
சர்க்கரை - 200 கிராம்
கிஸ்மாஸ் பழம் - 50 கிராம்

beetroot halwa,ghee,milk,sugar,recipe ,பீட்ருட் அல்வா,நெய்,பால்,சர்க்கரை,ரெசிபி

செய்முறை
முதலில் பீட்ருட்டை துருவி கொள்ளவும். பின்னர் வாணலியில் நெய் ஊற்றி அதி முந்திரிப்பருப்பு மற்றும் கிஸ்மஸ் பழம் போட்டு வறுத்து எடுத்து கொள்ளுங்கள்.பிறகு அதே நெய்யில் துருவி வைத்திருக்கும் பீட்ருட்டை சேர்த்து நன்கு கிளறி விடுங்கள், அதனுடன் பால் சேர்த்து நன்றாக பாலும், பீட்ருட் ஒன்றாக வேகவிட வேண்டும். ஒரு 15 நிமிடம் நன்றாக வெந்து பால் வற்றி வரும்பொழுது சர்க்கரையை சேர்த்து கிளறி விடுங்கள். சர்க்கரை கரைந்து இனிப்பு ஒன்று சேரும்வரை மிதமான சூட்டில் வேகவிட வேண்டும்.பிறகு கிஸ்மஸ் பழம், முந்திரிப்பருப்பு போட்டு கிளறி இறக்கிவிடுங்கள்.. அவ்ளோதா பீட்ருட் அல்வா தயார்.

Tags :
|
|
|