Advertisement

அசத்தலான பிரெட் குல்ஃபி இன்றைக்கே ட்ரை பண்ணுங்க!

By: Monisha Sat, 20 June 2020 4:58:44 PM

அசத்தலான பிரெட் குல்ஃபி இன்றைக்கே ட்ரை பண்ணுங்க!

குழந்தைகளுக்கு ஐஸ்கிரீம் என்றால் கொள்ளை பிரியம். இனி நீங்களே உங்கள் குழந்தைகளுக்கு விதவிதமாக ஐஸ்கிரீம் செய்து கொடுத்து அசத்தலாம். இன்றைக்கு புது விதமாக பிரெட் குல்ஃபி செய்து பாருங்கள்.

என்னென்ன தேவை?
பிரெட் – தேவைக்கேற்ப,
பால் – 1/2 கப்,
குங்குமப்பூ – சிறிது,
பாதாம் மில்க் பவுடர் – 2 டீஸ்பூன்,
கன்டன்ஸ்டு மில்க் – 1/2 டின், சோள மாவு – 1 டீஸ்பூன்,
முந்திரி, பிஸ்தா, பாதாம் – தேவைக்கேற்ப.

bread,milk,saffron,bread kuffi,ice cream ,பிரெட்,பால்,குங்குமப்பூ,பிரெட் குல்ஃபி,ஐஸ்கிரீம்

எப்படிச் செய்வது?
பிஸ்தா, பாதாமை ஊற வைத்து தோல் உரித்துக் கொள்ளவும். அவற்றை சிறு துண்டுகளாக நறுக்கவும். முந்திரியையும் சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பிரெட்டின் ஓரத்தை வெட்டிவிட்டு மிக்ஸியில் போட்டு தூளாக்கவும். கடாயில் காய்ச்சிய பாலை ஊற்றி, அதில் கன்டன்ஸ்டு மில்க் பிரெட் தூள் கலந்து கொதிக்க விடவும்.

சிறிது பாலில் ஊற வைத்த குங்குமப்பூவை அத்துடன் சேர்க்கவும். சோள மாவு, பாதாம் மில்க் பவுடரை கொதிக்கும் பாலில் கலக்கவும். அதில் நறுக்கிய பிஸ்தா, பாதாம், முந்திரியை சேர்த்து இறக்கி விடவும். கலவை ஆறிய பின் குல்ஃபி மோல்டில் ஊற்றி, ஃப்ரிட்ஜில் வைக்கவும்.

Tags :
|
|