Advertisement

பிரட் ஆம்லெட் எளிதாக செய்வது எப்படி?

By: Monisha Sat, 31 Oct 2020 8:11:08 PM

பிரட் ஆம்லெட் எளிதாக செய்வது எப்படி?

அனைவரும் விரும்பி சாப்பிடும் பிரட் ஆம்லெட் உங்கள் வீட்டிலேயே எளிதாக செய்வது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
பிரட் 2 பீஸ்
முட்டை 2 எண்ணம்
பட்டர்
உப்பு
எண்ணெய்
நல்ல மிளகு
புதினா

bread,omelette,butter,mint,pepper ,பிரட்,ஆம்லெட்,பட்டர்,புதினா,மிளகு

செய்முறை
புதினா மற்றும் சிறிது உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்து வைத்து கொள்ளுங்கள். தோசை கல்லை அடுப்பில் வைத்து அதில் வெண்ணெய் சிறிது போட்டு பிரட்டை கல்லில் போட்டு இரு பக்கமும் வெண்ணெயில் பிரட்டி எடுத்து தனியே வைத்து கொள்ளுங்கள். இரண்டு முட்டையை எடுத்து ஒரு கப்பில் விட்டு உப்பு, நல்ல மிளகு சேர்த்து வைத்து கொள்ளுங்கள் தோசை கல்லில் இரண்டு டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு அதில் முட்டை கலவையை ஊற்றி நன்றாக கல் முழுவதும் முட்டையை விரித்து அதன் மேல் பிரட்டை ஒரு பக்கம் முக்கி திருப்பி வையுங்கள் இரண்டு பிரட்டையும் முட்டையின் மேல் வைத்து ஒரு பிரட் துண்டு மீது புதினா மற்றும் ஒரு துண்டின் மீது வெண்ணெய் சேர்த்து எல்லா பகுதிகளையும் மடக்கி விடுங்கள். பிரட்டையும் ஒன்றாக மடித்து திருப்பி போட்டு நன்றாக வேகவையுங்கள். வெந்த பிறகு அதை குறுக்காக வெட்டி பாத்திரத்தில் வைத்து பரிமாறுங்கள்.

Tags :
|
|
|