Advertisement

எளிய முறையில் செஸ்வான் வெஜ் பிரைடு ரைஸ் செய்வது எப்படி ?

By: Karunakaran Fri, 11 Dec 2020 5:43:51 PM

எளிய முறையில் செஸ்வான் வெஜ் பிரைடு ரைஸ் செய்வது எப்படி ?

செஸ்வான் வெஜ் பிரைடு ரைஸ் செய்ய தேவையான பொருட்கள் :

செஸ்வான் சாஸ் செய்வதற்கு,

வரமிளகாய் - 6
இஞ்சி - சிறிதளவு
பூண்டு பல் - 3

ஃப்ரைட் ரைஸ் செய்வதற்கு,

உதிரியாக வடித்த சாதம் - 1 கப்
பெரிய வெங்காயம் - 1
பூண்டு பல் - 2
கேரட் - சிறிதளவு
பீன்ஸ் - சிறிதளவு
குடைமிளகாய் - சிறிதளவு
மிளகு தூள் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு

ceswan veg fried rice,fried rice,veg recipes,ceswan foods ,செஸ்வான் வெஜ் வறுத்த அரிசி, வறுத்த அரிசி, காய்கறி சமையல், செஸ்வான் உணவுகள்

செய்முறை :

முதலில் இஞ்சி, பூண்டு, வெங்காயம், கேரட், பீன்ஸ், குடைமிளகாயை பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும். முதலில் செஸ்வான் சாஸ் செய்வதற்கு 6 முதல் 7 வரை மிளகாயை சுடுதண்ணியில் அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும். அரைமணி நேரம் ஊறிய பிறகு மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி நறுக்கிய இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கிய பின்பு நாம் அரைத்து வைத்துள்ள பேஸ்ட்டை அதில் ஊற்றி நன்கு எண்ணெய் பிரிந்து வரும் வரை கிளற வேண்டும். செஷ்வான் சாஸ் இப்பொழுது தயாராகிவிட்டது.

ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி நறுக்கிய பூண்டு, பெரிய வெங்காயம், கேரட், பீன்ஸ், சேர்த்து நன்கு வதக்க வேண்டும். பின் கேரட், பீன்ஸ் நன்கு வதங்கிய பின்பு குடைமிளகாய் சேர்த்து வதக்கி, தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும். பின் சிறிதளவு மிளகு தூளை சேர்த்துக் கொள்ள வேண்டும். முன்பே தயார் செய்து வைத்திருந்த செஸ்வான் பேஸ்ட்டை போட்டு நன்கு கிளறி, பிறகு வடித்த சாதத்தை போட்டு நன்கு கிளறி எடுத்தால் காரசாரமான செஸ்வான் வெஜ் பிரைடு ரைஸ் தயார்.



Tags :