Advertisement

சப்பாத்தி நூடுல்ஸ் செய்வது எப்படி ?

By: Karunakaran Fri, 20 Nov 2020 4:16:03 PM

சப்பாத்தி நூடுல்ஸ் செய்வது எப்படி ?

காலையில் மீந்து போன சப்பாத்தியை வைத்து மாலையில் சூப்பரான சப்பாத்தி நூடுல்ஸ் செய்யலாம். இதனை குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.

தேவையான பொருட்கள்

சப்பாத்தி - 3
வெங்காயம் - 1
சோயா சாஸ் - 1/2 டீஸ்பூன்
சில்லி சாஸ் - 1 டேபிள்ஸ்பூன்
தக்காளி சாஸ் - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 1 டீஸ்பூன்
கொத்தமல்லி - சிறிது அளவு

chapati,noodles,snack,simply food ,சப்பாத்தி, நூடுல்ஸ், சிற்றுண்டி, உணவு

செய்முறை

வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும். சப்பாத்தியை நீளவாக்கில் வெட்டி வைக்க வேண்டும். கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கி கொள்ள வேண்டும்.

பிறகு இதில் சோயா சாஸ், சில்லி சாஸ், தக்காளி சாஸ், சிறிது உப்பு சேர்த்து குறைந்த தீயில் வதக்க வேண்டும். பிறகு வெட்டியை சப்பாத்தி நூடுல்ஸ் இதனுள் சேர்க்க வேண்டும். குறைந்த தீயில் 2 நிமிடம் வதக்கி குறைந்த தீயில் 2 நிமிடம் மூடி வைத்து இறுதியாக கொத்தமல்லி இலை தூவி பரிமாற வேண்டும். விருப்பப்பட்டால் இதனுடன் முட்டை அல்லது விருப்பப்பட்ட காய்கள் சேர்த்து கொள்ளலாம்.

Tags :
|