Advertisement

சுவையான முறையில் செட்டிநாடு மீன் குழம்பு செய்வது எப்படி?

By: Nagaraj Tue, 14 Mar 2023 09:36:54 AM

சுவையான முறையில் செட்டிநாடு மீன் குழம்பு செய்வது எப்படி?

சென்னை: சுவையான முறையில் செட்டிநாடு மீன் குழம்பு செய்வது எப்படி என்று தெரியுங்களா. செய்வோம் வாங்க.
தேவையான பொருட்கள் :மீன் - 1/2கிலோநல்லெண்ணை - 4ஸ்பூன்வெந்தயம் - 1/4ஸ்பூன்கடுகு - 1ஸ்பூன்கருவேப்பிலை - 10 பூண்டு - 10பல்சின்ன வெங்காயம் - 20தக்காளி - 4 மிளகாய் தூள் - 2ஸ்பூன்சீரகம் தூள் - 1/4ஸ்பூன்குழம்பு மிளகாய் தூள் - 1ஸ்பூன்உப்பு - தேவையான அளவுமஞ்சள் தூள் - 1/2டீஸ்பூன்புளி - லெமென் அளவு

fish broth,spring onion,turmeric powder,tomato,cumin powder ,மீன் குழம்பு, சின்ன வெங்காயம், மஞ்சள் தூள், தக்காளி, சீரகத்தூள்

செய்முறை: வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, வெந்தயம், பூண்டு, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். சின்ன வெங்காயம், வதக்கிய பின்பு மஞ்சள் தூள், மிளகாய்தூள், குழம்புமிளகாய்தூள், சீரகத்தூள் சேர்த்து தேவையான அளவு உப்பு போட்டு வதக்கவும்.

தக்காளி நைசாக அரைத்துக் கொள்ளவும். பின்பு தக்காளி சேர்க்கவும். தண்ணீரும் சேர்த்து தேவையான அளவு உப்பு போட்டு, கரைத்து வைத்த புளித் தண்ணீரை ஊற்றி சுண்டும் போது கொதிக்க விட்டு கொதி வந்த பிறகு மீன் சேர்க்கவும். 5 நிமிடம் மீன் வெந்ததும் கொத்தமல்லியைத் தூவி இறக்கவும். ருசியான செட்டிநாடு மீன் குழம்பு ரெடி.

Tags :
|