Advertisement

அனைவரும் விரும்பி சாப்பிடும் தேங்காய்பூ கொழுக்கட்டை செய்வது எப்படி?

By: Monisha Wed, 07 Oct 2020 3:45:58 PM

அனைவரும் விரும்பி சாப்பிடும் தேங்காய்பூ கொழுக்கட்டை செய்வது எப்படி?

கொழுக்கட்டையில் பல வகைகள் உள்ளன. இன்று நாம் அனைவரும் விரும்பி சாப்பிடும் தேங்காய்பூ கொழுக்கட்டை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
பச்சரிசி மாவு - 1 கப்
தேங்காய் -1 மூடி
வெல்லம் - 150 கிராம்
ஏலக்காய் - 5
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப

rice flour,jaggery,coconut,cardamom,recipe ,பச்சரிசி மாவு,வெல்லம்,தேங்காய்,ஏலக்காய்,ரெசிப்பி

செய்முறை
மாவை பச்சரிசியை களைந்து நீர் வடித்து பின் ஒரு மணி நேரம் மூடி வைத்திருந்து பின் மிக்ஸியில் நைஸாக மாவாக அரைக்கவும். மாவு எத்தனை கப் உள்ளதோ அந்த அளவு தண்ணீரில் இரண்டு டீஸ்பூன் நல்லெண்ணெய் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து கொதிக்க விட்டு, நிதானமான தீயில் மாவை சிறிது சிறிதாக தூவி கட்டிகளின்றி கிளறி இறக்கி ஆறிய பின் கையினால் அழுத்தி பிசைய வேண்டும்.

கொதி நீரில் கரைத்து வடிகட்டிய வெல்ல நீருடன் தேங்காய் பூ சேர்த்து கிளறி ஏலக்காய் பொடி சேர்த்து தண்ணீர் வற்றி வரும் போது இறக்கவும். மாவை வாழையிலையில் தட்டி நடுவில் பூர்ணம் வைத்து கிண்ணம் போல் குவித்து மூட வேண்டும். இட்லித்தட்டில் வைத்து ஆவியில் 10 நிமிடங்கள் வேக வைக்க எடுக்க வேண்டும். சுவையான தேங்காய்பூ கொழுக்கட்டை ரெடி!

Tags :