Advertisement

கிரிஸ்பியனா உருளைக்கிழங்கு ஸ்மைலி செய்வது எப்படி?

By: Monisha Wed, 28 Oct 2020 10:16:32 AM

கிரிஸ்பியனா உருளைக்கிழங்கு ஸ்மைலி செய்வது எப்படி?

குழந்தைகள் விரும்பி சாப்பிடும் கிரிஸ்பியனா உருளைக்கிழங்கு ஸ்மைலி எப்படி செய்வது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
உருளைக்கிழங்கு – கால் கிலோ
மிளகாய்த் தூள் – 1/2 டீஸ்பூன்
எண்ணெய், உப்பு – தேவைக்கு
செடார் சீஸ் – 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
பிரெட் க்ரம்ஸ் – 3½ டீஸ்பூன்
கார்ன் ஃப்ளார் – 3 டீஸ்பூன்
உப்பு – தேவைக்கு

ஸ்மைலி செய்ய
ஸ்ட்ரா – 1,
ரவுண்ட் கட்டர்- 1.
ஸ்பூன் – 1.

potatoes,smiley,crispy,corn flour,cheese ,உருளைக்கிழங்கு,ஸ்மைலி,கிரிஸ்பி,கார்ன் ஃப்ளார்,சீஸ்

செய்முறை
உருளைக்கிழங்கை நன்றாக வேகவைத்து மசித்து கொள்ள கொள்ள வேண்டும். மசித்த உருளைக்கிழங்கு, கார்ன்ஃப்ளார், மஞ்சள் தூள், பிரெட் க்ரம்ஸ், உப்பு, சீஸ், மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாக பிசைய வேண்டும். பின் இதனை அரை மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைக்கவும். பிளாஸ்டிக் பேப்பரில் சிறிது எண்ணெய் தேய்த்து நடுவில் பிசைந்த மாவை பெரிய உருண்டையாக உருட்டி வைத்து மூடி சப்பாத்தி கட்டையால் சப்பாத்தி போல தேய்க்க வேண்டும்.

பின்னர் ரவுண்ட் கட்டர் வைத்து வெட்டி ஸ்ட்ரா கொண்டு கண்கள் போல் இரண்டு ஓட்டை போட வேண்டும். வாய்க்கு ஸ்பூன் வைத்து வரைய வேண்டும். கடாயில் எண்ணெய் ஊற்றி மிதமான சூட்டில் வைத்து ஸ்மைலிகளை போட்டு பொரித்தெடுத்து டொமேட்டோ கெட்சப் உடன் சாப்பிடவும்.

Tags :
|
|