Advertisement

வெள்ளரிக்காய் அடை செய்வது எப்படி ?

By: Karunakaran Wed, 25 Nov 2020 1:02:24 PM

வெள்ளரிக்காய் அடை செய்வது எப்படி ?

பெரியோர் முதல் சிறியோர் வரை அனைவருக்கும் உகந்தது வெள்ளரிக்காய் அடை.

தேவையான பொருட்கள்

புழுங்கலரிசி - 1 கப்,
முளை கட்டிய பாசிப்பயறு, கொண்டைக்கடலை - தலா 1/2 கப்,
தோல் சீவி பொடியாக நறுக்கிய வெள்ளரிக்காய் - 3/4 கப்,
காய்ந்தமிளகாய் - 4,
இஞ்சி - சிறு துண்டு,
பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை - சிறிது,
நல்லெண்ணெய், உப்பு - தேவைக்கு.

cucumber,adai,dosai,hydration ,வெள்ளரி, அடாய், தோசை, நீர்ச்சத்து

செய்முறை

முதலில் புழுங்கலரிசியை ஊறவைத்து அதில் பாசிப்பயறு, கொண்டைக்கடலை, காய்ந்தமிளகாய், இஞ்சி சேர்த்து அரைக்க வேண்டும். முக்கால் பதம் அரைந்ததும், வெள்ளரிக்காயை மாவுடன் கலந்து, உப்பு சேர்த்து அடைமாவு பதத்திற்கு அரைத்து நன்கு கலக்க வேண்டும்.

பின்னர் அதனுடன் கறிவேப்பிலை சேர்த்து கலக்க வேண்டும். பின் தோசை கல்லை அடுப்பில் வைத்து கல் காய்ந்ததும், மிதமான தீயில் வைத்து மாவை அடைகளாக ஊற்றி இருபுறமும் எண்ணெய் விட்டு வெந்ததும் எடுத்து பரிமாற சுவையான வெள்ளரிக்காய் அடைதயார்.

Tags :
|
|