Advertisement

சுவையான ப்ராக்கோலி பொரியல் செய்வது எப்படி

By: Monisha Fri, 18 Sept 2020 2:58:10 PM

சுவையான ப்ராக்கோலி பொரியல் செய்வது எப்படி

ப்ராக்கோலியில் கால்சியம், வைட்டமின் கே, நோய் எதிர்ப்பு சக்தி, மக்னீசியம், வைட்டமின் சி ஆகியவை அதிகளவில் உள்ளது. இத்தகைய சத்து நிறைந்த ப்ராக்கோலியை வைத்து சுவையான பொரியல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
ப்ராக்கோலி - 1 (சிறியது)
வெங்காயம் - 1/2 (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 1
துருவிய தேங்காய் - 2 மேசைக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - தேவையான அளவு
கடுகு - 1/2 தேக்கரண்டி
வரமிளகாய் - 2
உளுத்தம் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு.

calcium,vitamins,immunity,magnesium,broccoli fry ,கால்சியம்,வைட்டமின்,நோய் எதிர்ப்பு சக்தி,மக்னீசியம்,ப்ராக்கோலி பொரியல்

செய்முறை
முதலில் ப்ராக்கோலியை நன்கு கழுவி, பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பின்னர், ஒரு வாணிலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, வரமிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும். பிறகு அதில், ப்ராக்கோலி மற்றும் உப்பு சேர்த்து 3&5 நிமிடம் நன்கு வதக்கி, ப்ராக்கோலி நன்கு அடர் நிறத்தில் மாறும்போது, அதில் தேங்காயை சேர்த்து கிளறி இறக்கினால், சுவையான ப்ராக்கோலி பொரியல் தயார்.

Tags :