Advertisement

அருமையான சுவையில் முந்திரி குழம்பு வைப்பது எப்படி?

By: Nagaraj Sun, 03 Sept 2023 4:54:45 PM

அருமையான சுவையில் முந்திரி குழம்பு வைப்பது எப்படி?

சென்னை; அருமையான சுவையில் முந்திரிக் குழம்பு வைப்பது எப்படி என்று இன்று தெரிந்து கொள்வோம் வாங்க.
தேவையான பொருட்கள்:
முந்திரி - 15சின்ன வெங்காயம் - ஒரு கப்பூண்டு - அரை கப்தக்காளி - 5மிளகாய்த்தூள் - 3 தேக்கரண்டிமல்லித்தூள் - ஒரு தேக்கரண்டிமஞ்சள் தூள் - கால் தேக்கரண்டிபுளி - எலுமிச்சை பழ அளவுகடுகு - அரைத் தேக்கரண்டிவெந்தயம் - அரைத் தேக்கரண்டிசீரகம் - அரைத் தேக்கரண்டிசோம்பு - அரைத் தேக்கரண்டிபட்டை - சிறு துண்டுலவங்கம் - 2ஏலக்காய் - 1உப்பு - ஒரு தேக்கரண்டிஎண்ணெய் - 3 தேக்கரண்டிதேங்காய் – தேவையான அளவுகறிவேப்பிலை - தேவையான அளவு

cashew curry,curry leaves,tomatoes,sour cream,onions ,முந்திரி குழம்பு, கறிவேப்பிலை, தக்காளி, புளிக்கரைசல், வெங்காயம்

செய்முறை: வெங்காயம் மற்றும் பூண்டை இரண்டிரண்டாக நறுக்கவும். தக்காளியை பொடியாக நறுக்கவும். புளியை இரண்டு கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, வெந்தயம், சீரகம், சோம்பு, பட்டை, லவங்கம், ஏலக்காய் போட்டு தாளிக்கவும்.

பிறகு வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். வதக்கியவற்றுடன் தக்காளி மற்றும் உப்பு சேர்த்து தக்காளி மசியும் வரை வதக்கவும். தக்காளி குழைந்ததும் புளிக்கரைசலை சேர்த்து கொதிக்க வைக்கவும்.

தேங்காய் துருவலுடன் முந்திரியை சேர்த்து நைசாக அரைத்து குழம்பில் சேர்த்து நன்றாக கொதிக்க விட்டு இறக்கவும். சுவையான முந்திரிக் குழம்பு தயார். விரும்பினால் 20 முழு முந்திரியை வெங்காயத்துடன் சேர்த்து வதக்கலாம்.

Tags :