Advertisement

சுவையான முருங்கை கீரை ஆம்லெட் செய்வது எப்படி?

By: Monisha Tue, 11 Aug 2020 6:36:09 PM

சுவையான முருங்கை கீரை ஆம்லெட் செய்வது எப்படி?

இரும்பு சத்து அதிகம் உள்ள முருங்கை கீரை வைத்து சுவையான ஆம்லெட் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
முட்டை - 3
முருங்கை கீரை - 1 கைப்பிடி
பால் - 2 மேஜைகரண்டி
பெரிய வெங்காயம் - 1
ப.மிளகாய் - 3
இஞ்சி - சிறிய துண்டு
தேங்காய் துருவல் - 3 மேஜைகரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
கரம்மசாலா தூள் - சிறிதளவு
மஞ்சள் தூள், மிளகு தூள் - தேவையான அளவு
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை
முருங்கை கீரையை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும். பாலில் முட்டையை உடைத்து ஊற்றி நுரைவரும் அளவுக்கு நன்றாக அடித்து கலக்குங்கள். பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி போன்றவைகளை சிறிதாக நறுக்குங்கள். நறுக்கிய பொருட்களோடு தேங்காய் துருவல், சீரகம் போன்றவைகளை சேர்த்து மிக்சியில் போட்டு அரையுங்கள்.

அரைத்த மசாலாவில் முருங்கை இலை, மசாலா தூள் சேருங்கள். அத்துடன் மீதமிருக்கும் அனைத்து பொருட்களையும் சேர்த்து மீண்டும் லேசாக மிக்சியில் ஓடவிடுங்கள். அதில் முட்டை கூழையும், உப்பையும் சேர்த்து நன்றாக கலக்குங்கள். தோசைக் கல்லை சூடாக்கி கலவையை ஊற்றி ஆம்லெட்டாக சுட்டு சுவையுங்கள்.

Tags :
|
|